உணர்விலே கலந்தவனே - 8

2.2K 61 0
                                    

ஷாக்க்ஷித்தா...மெழுகு பொம்மை.. 5.5" உயரமுடைய அழகு சிற்பம்... அவளது பால் போன்ற சருமத்தில் இருக்கும் வெண்மையை... குணத்தில் படைக்க மறந்தான் பிரம்மன்.

பணத்தை மட்டுமே பெருமையாய் நினைத்து அதன் பின்னே ஓடும் தந்தைக்கும் சமூக பகட்டில் ஊறிய தாய்க்கும் பிறந்தவளுக்கு எங்கே இருந்து வரும் நற்குணங்கள்...

ஒயிலாக இருப்பவளுக்கு ... எண்ணில் அடங்கா பணம்‌... இரவு நேர கேளிக்கைகள்... தினமொரு பாய் ஃரெண்ட் ... பார்த்தவுடன் பிடித்திருந்தால் blind dating என்று மேற்கத்திய மொத்த சீர்கேட்டின் அடையாளமாக திரிபவளின் விழிகளில் விழுந்தான் நிகில் ஷர்மா...

முதலில் நான் பார்க்காத ஆண்களா ... உன்னை விட அழகானவர்களை என் பாதத்தில் விழ வைத்திருக்கிறேன் என்று எண்ணியவளின் அலட்சியத்தை தூள்தூளாக்கினான் நிகில் ஷர்மா... அவளும் அவன் பங்கெடுத்த விழாவிற்கு வந்திருந்த பொழுதே புரிந்து கொண்டாள்.... இவன் முற்றிலும் மாறுபட்டவனென்று...

அதன் பிறகு நிகிலை தன் காலடியில் விழ வைப்பதே லட்சியமாய் மாற... அவன் நுழைந்த பிறகு sr groups ன் சேர் ரேட்ஸ் எங்கோ எகுற...ஒர் ஆண்டுகுள்ளாக அழிந்தே போயிவிடும் என்ற நிலையில் இருந்த நிறுவனம்... உலக பணக்காரர்களுள் ஒன்றாய் அதுவும் 5 இடங்களுக்குள் ஒன்றாய் மாறிய விந்தையை... கைத்தேர்ந்த economists ஆளும் விவரிக்க முடியவில்லை...

அவனை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தவளோ மீனுக்கு வலை விரிக்க... அவனோ திமிங்கிலம் நான் என்று நிரூபித்தான்... அவளது அனுபவமோ என்னவோ நேரிடியாய் சில இடங்களில் களம் இறங்காமல் அவனை ஆராயவே அவளது கைக்கூலிகளை வைத்து சோதனை செய்தாள்‌...

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை பறக்க‌... தன் அறையை அடித்து நொறுக்கியவளின் விழிகளில் விழுந்தது... மென்மையை மட்டுமே தாங்கிய பணக்காரப் பெண்ணை பார்த்தவுடன்‌... அவள் குணங்கள் பிடித்து நேசித்த முரட்டு காளையாய் hero இருக்கும் போல் ஒரு ஹிந்தி சீரியல்... அதன் போல் செயலாற்ற தொடங்கினாள்.

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora