உணர்விலே கலந்தவனே - 36

2.5K 69 14
                                    

பகுதி - 36

ஜான்வி அழுகையுடன் வெளி வந்ததும்... நரேனின் வாடிய தோற்றமும்.. கலை மீது கனன்று கொண்டிருந்த கோபத்திற்கு விசிறியாய் இருந்தது... நிதினிற்கு... அதனால் வேகமாக அவளது அறைக்கு நெருங்கியவனுக்கு... இருவரும் பேசுவது காதில் விழ... நின்றிருந்தவனின் விழிகளிலும் ஈரம்‌...

அதேபோல் கலையின் மீது ரெட்டிப்பு மரியாதை பெருகியது அவனுள்... அதன் காரணமாகவே நடந்தவை யாவையும் முதல் வேலையாக... நிகிலுக்கு அழைத்துச் சொல்ல...

" அடுத்தவங்களுக்குன்னா வாய் கிழிய பேசத் தெரியும்.... ஆனா நான்னா.... இந்த மூளை எங்க தூங்கப் போகுமோ... " என்று ஆசையாக மனதிற்குள் மனைவியை புகழ்ந்து கொண்டிருந்தான் .

நாட்களோ‌‌... எனக்கு ஓய்வே கிடையாது என்று சொல்லி வேகமாக ஓடிக் கொண்டிருக்க....

ஜான்வியோ... வேலைக்கு போகப் போகிறேன் என்று அவள் நிற்கையில்.... " உன் புருஷன்.. நீ இங்க இருக்கறதுக்கு பணம் தந்து... எங்களை கஷ்டப்படுத்தறான்னா...  நீயும் வேலைக்கு போய்... எங்கள படுத்த கிளம்பீட்டியா.... " என்று கேட்ட நொடி கலைக்கு எப்படி எடுத்துக் கொள்ளவென்றே தெரியவில்லை...

நிகில்...  தான் இங்கு தங்குவதற்கு பணம் தருகிறான் என்றால் எதற்காக தன்னை  இங்கே விட்டு வைத்திருக்க வேண்டும்.. இதுவரை ஜான்வி கூறியதில் இருந்து... அவனுடைய பெற்றோர் காதல் திருமணம் என்பதால் இந்திராதேவி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும்... தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காகவே... தங்களுக்காக இங்கு வந்து போய் கொண்டிருக்கிறான் என்பதும்...

இவ்வளவு கோபம் இருக்கும் இடத்தில் தன்னை விட்டு வைத்திருக்க தேவை என்ன... ஒருவேளை அவன் காதலி படும் வேதனையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா... அல்ல மறைமுகமாக இவன் தன்னால் இழந்த வாழ்க்கையை சூட்டிக் காண்பித்து.. தேவிடமிருந்து தன்னை பிரித்து வைத்திருப்பதற்காகவா... என்று எண்ணியவளாய்‌...

அவள் கூறிய கம்பெனியின் பெயரை கேட்டு.... கூடவே கூடாது என்று அடம்பிடிக்க.... முதாலாளியாய் போக வேண்டிய இடத்திற்கு தொழிலாளியாக போக வேண்டுமா என்றதில் ஆர்பாட்டம் செய்ய.... அவரை கட்டுப்படுத்துவது அர்ஜூன் முறையாயிற்று... அதேபோல் அவளுக்கும் அவர்களுடையது என்று தெரியவில்லை.‌. தெரிந்தவர்களோ... காட்டிக்கவில்லை.‌..

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now