உணர்விலே கலந்தவனே - 19

2.3K 49 4
                                    

பகுதி - 19

தான் சாதித்துவிட்ட கர்வத்தில் இருந்தவளுக்கு… பேரிடியாய்…

அவன் அணிந்திருந்த உடை மிக நேர்த்தியாக... பேரழகனாக எடுத்துக்காட்ட... தன் கம்பீரம் குறையாமல் நடந்து வந்தவனின்  தோற்றத்தில்... அந்த அரங்கத்தில் உள்ளோர் அனைவரின் மனதிலும் அவன் ஆளுமையின் மீது சிறு பொறாமையும்.... நட்பு வட்டாரத்தில் கர்வமும் ஒருங்கே எழுந்தது....

ஷாக்க்ஷித்தாவும் அவனுக்கு குறையாதவளாக... அங்கு வெள்ளைப் பதுமையாய்... அழகு ஓவியமாய்... ஆடம்பரமாய் உடை அணிந்திருக்க... இருவரது ஜோடிப் பொருத்தமோ... வெகு பிரமாதமாக இருந்தது... மனம் முழுவதும் தான் ஜெயித்துவிட்ட இறுமாப்பிலும்... அகந்தையிலும்.... அவள் இருக்க... இனிமையாய் ஆரம்பித்த விழா... தலைகீழா மாறிய விதத்தை‌... அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை‌...

தன் கல்யாணம் கனவு தடைப்பட்டு... சில தினங்களுக்கு மேல் ஆகியும்... அவளால் நம்ப முடியவில்லை... நிகிலை பார்த்தது முதல் அவனின் மேல் துளிர்தெழுந்த ஆசை நாளுக்கு நாள் பெருகியதே தவிர... குறையவில்லை... தன் அழகை திரும்பியே பார்க்காதவனை தன் காலுக்கு அடியில் கொண்டு வந்துவிடும் வேகம்...

இதோ... இன்று நிறைவேறிவிடும் .... என்று அவள் கனவில் மிதந்து...
நிகில் மோதிரம் அணியப் போகும் நேரத்திற்காக காத்திருக்க… இருவரையும் மேடைக்கு அழைக்கும் பொழுது… அப்பா என்ற ஆர்ப்பாட்ட அழைப்பில் அந்த இடமே நிசப்தமானது…

முதலில் அதிர்ந்தாலும்… நிகிலை பார்க்க.. அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை… ஆனாலும் அந்த சிறுவனிடம் நீ யார் என்பது போலான கேள்விகள் அவனிடம் இருந்தோ... அல்லது அவனை சார்ந்த மற்றவரிகளிடம் இருந்தோ... வரவில்லை .

ஷாக்க்ஷிதா... அந்தச் சிறுவனை விசாரிக்க நினைத்து... அவன் உயரத்திற்கு குனியும் பொழுது… மீண்டும் கதவு திறக்க… அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள் .

அவளை பார்த்ததும் சிறய மாற்றமாய்... அவனுள் மெல்லிய பரபரப்பு ‌… அதை கண்டவளுக்கோ பேரதிர்ச்சி…. ஒருவேளை அவன் முன்னால் கேர்ள் ஃப்ரெண்டாக இருப்பாளோ‌… என்ற எண்ணம் எழ… நிகில்… என்ற அவளின் அழைப்பை கண்டு கொள்ளாதவனாய்… அவள் பின்னேயே வெளியேறிவிட்டான் ‌.

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now