உணர்விலே கலந்தவனே - 54

2.8K 61 1
                                    

பகுதி - 54

கனவுகள் காணும் இரவில்... இரு நெஞ்சங்களின் கனவுகள் நனவாகி... உறக்கம் தொலைந்திருக்க... ஊரே உறங்கும் நேரம்... இந்த மனங்கள் விழித்து நேசம் உறவாடி... தன் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை பந்தலுக்கு கீழ் இருக்கும் இருக்கையில் கலையை தன் மடியில் அமர்த்திக் கொண்டவனுக்கு.... மலைப் பிரதேசத்தின் பனிச்சாரலும்... குளிராமல் தேகத்தை கொதிப்படையவே செய்தது... சுட்டெரிக்கும் அவன்  மூச்சுக் காற்று... தன் ஜாக்கெட் மறைக்காத இடத்தில் பட்டுத் தெறிக்க... கணவன் வெளிப்படுத்தும் காதலில் கலை கசிந்துருகி... மதி மயங்கியிருந்தாள் .

எஸ்... என்று... மெதுவாக குழைந்த குரலில் கூறி... அவள்  நெஞ்சுக்குழியில் பத்திரமாய் இருந்த...  அந்த டாலரை அவன் விரல்கள் மெல்ல வருட...

" உங்களுக்கு வெறும் எஸ் மட்டும்தான் தெரியுதா... " என்று குறுஞ்சிரிப்பை தனக்குள் அடக்கி வினவ...

ம்... என்று யோசனையில் ஒற்றை புருவத்தை மேலேற்றி ஊன்றி கவனிக்க... இதுவரை தங்கப்புள்ளிகளாக தெரிந்தது... ஒரு புது எழுத்தின் வடிவத்தைக் காண்பிக்க... ஹேய்.‌... இந்த டாட்ஸ்... லெட்டர் "கே"  ரைட்... என்றான்... மொத்த சந்தோஷத்தையும் குத்தகைக்கு எடுத்தவனாக...

" ம்..ம்.... ஆமா... எப்பவும் இந்த Sக்குள்ளதான்... K... கலை ..ம்ஹூம்... உங்க கனி இருப்பா.... " என்று அவன் கீழ் உதட்டை இரு விரல்களால் பிடித்து ஆடியவாறே சொல்ல... ஒரு பெண்ணின் காதல் அதுவும் தான் உயிராய் நினைப்பவளின் காதல் ஆண்மகனை கர்வம் கொள்ளச் செய்யாமல் போகுமோ.... கர்வமாய் தன் மனைவியை பார்த்தவன்... அவள் மீதான மொத்தக் காதலையும் ஒற்றை முத்தத்தில் காண்பிக்க... சுகமாய் தாங்கி நின்றாள் ...

அந்த மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணாக்கள் தங்கள் வகுப்புகள் முடிந்து... வளாகத்தில் இருந்து கலைந்திருக்க... ஒரு சிலர் அங்கிருக்கும் மரத்தடியிலும்... கேண்டினிலும் குழுமி அரட்டைக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்... கேண்டின் அருகே சஞ்சய்யும் அவன் நண்பர்களோடு எப்பொழுதும் கூடும் இடத்தை நிரப்பியிருக்க...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz