பகுதி - 22
அவனுடைய கண்களோ , ரௌத்திரத்தின் இருப்பிடமாய்... முகமோ பாறையை ஒத்திருந்தது... கலையோ தன்னை நிலைப்படுத்தியவளாக... வார்த்தைகளை தேடியலைய....
" just... u have made it " , என்று அடிக்குரலில் கர்ஜித்திருந்தான்...
"நான்... நான்..." , என்று தடுமாறியவளை... காணவும் கோபம் தலைக்கேற.. அவளது இரு தோள்களை அழுந்த பிடித்திழுத்து...
"நான்... உன்னால... என்ன செய்ய முடியும்னு... நினைச்சு... அலட்சியமா இருந்துட்டேன்... ஆனா... எப்ப...எப்ப..ன்னு... பா.த்...து.. கா..த்..திருந்து... சா.தி..ச்..சுட்டே...ல்..ல... " என்று
அவனுடைய குரல்.. கடித்து துப்பிய சொற்களின் வேகம் போல்... அவன் பற்றிய கரங்களிலும் வெளிப்பட... அவளது தோள்களில் வலியெடுத்தது என்றால்... கர்ஜனையில்... உடல் நடுங்கியது...
அந்த நடுக்கமே... அவனின் கோபத்திற்கு தூண்டுகோளாய் இருப்பதை அறியவில்லை அவள்...
" இல்ல... அப்படியில்ல... " என்று இடைமறித்தவளை... கண்டுக் கொள்ளாதவனாய்...
" சொன்ன மாதிரியே... நீ.. நடத்தி..ட்ட... இல்ல... " என்றவனிடம்...
வேகமாக " ப்ளீஸ்.. தப்பா... நினைக்காதீங்க... நா... அவன் தெரியாம... உங்கள.. அவன் அப்பா..ன்..னு..." விளக்கம் கூற ஆரம்பித்தவளின் கூற்றில் இருந்த பிதற்றல்.... பித்தம் தலைக்கு ஏறியிருந்தது.
இப்பொழுதும்.. தன்னிடம் யாரோ போல் பேசிவதும்.. அதுவும் அவன் மகன்... தன்னை தவறாக அடையாளம் கண்டுவிட்டதாக கூறும் விளக்கத்தில் வெகுண்டிருந்தான் . அருகிழுத்து.. மேலும் வார்த்தைகளை கடித்து துப்ப..
அவன் சிந்திய வார்த்தைகளின் கணம் தாள முடியாமல்... கலையின் கரம் அவன் கன்னத்தில் இறங்கி இருந்திருந்தது...
" ஒரு வார்த்தை... ஒரு வார்த்தை... இனி என் பையன பத்தி தப்பா பேசுனீங்க... நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.. நீங்க... நீங்களா ... அவனோட அப்பா... இல்லவே இல்ல... நீங்க எம் புள்ளைக்கு அப்பாவா... இருக்கவே முடியாது... அவன் அப்பான்னு கூப்படுற தகுதி உங்களுக்கு... கிடையவே... கிடையாது.... இல்ல... இல்லவே.... அவனோட.... அப்பாவா.... நீ... இருக்கவே முடியாது ...." என்று.... திரும்ப.. திரும்பச் சொன்னவள்.... அவனுக்குச் சொன்னாளோ.... அல்ல.... அவளுக்கே சொல்லிக் கொண்டாளோ....
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...