உணர்விலே கலந்தவனே - 58

2.7K 65 10
                                    

பகுதி - 58

பலவற்றை எண்ணியவளாக மேடையே கண்ணாக இருந்தாள்...
தன் அருகே யாரோ அமரவும்... திரும்பி பார்த்தவள்... நந்தனை காண... செப்பு இதழ்கள் பூவாய் மலர.. " என்னடா... ஒரு ஆளு இன்னும் அட்டென்டஸ் கொடுக்கலையேன்னு பாத்தேன்.. பரவால்ல... " என்று கிண்டலடித்தவளை கொலைவெறியுடன் முறைத்தாலும்...

" உனக்கு இருக்க ஏத்தம் இருக்கே... இப்பெல்லாம் ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க.‍.. பாத்துக்க..." என்றவன் கூறினான்...

அவள் கழுத்தில் இருக்கும்... வைரங்களோடு போட்டிப் போட்டது... அவள் நகைப்பு...

" கீர்த்தி எங்க நந்து... "

" படுக்கப் போயிட்டா... "

" சாப்பிட்டாளா... நீ சாப்பிட்டியா..."

" ம்...  என்றவன்...   உன்னை பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா..."  என்று அவள் கைப்பற்றி கூறவும்... அதற்கும் புன்னகையே பரிசாக அளித்தாள்...

அவர்கள் உரையாடும் பொழுதே ஒவ்வொருவராய் நண்பர்கள் பட்டாளம் ஒன்று கூடியது...

சுமியும் பாலாவும் சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான் கலையை ஒரு வழி செய்துவிடுவார்கள்...

" டேய் நந்தா.. நீ ஆல்ரெடி ஆஜரா... அவன் என்னடான்னா... என் பொண்டாட்டி  தனியா உக்காந்துயிருக்கா... தங்கச்சிய கவனக்கறது இல்லையான்னு... குதிச்சுட்டு இருந்தான்..."  என்றபடியே... பாலா வந்துஅமர...

" உங்களையுமா... இங்க என்னடா பண்ற... கனிகிட்ட போன்னு... என்னையும் என் பொண்டாடியையும் பிரிச்சு அனுப்பிட்டான்... " என்று இணைந்து கொண்டான் நந்தன்... அவர்களது அலப்பறையில் தன் கீழ் உதட்டை கடித்து வெட்கத்தை மறைத்துக் கொள்ள பெரிதும் கலை போராடினாள்..

" எனக்கு இப்ப தெரிஞ்சே ஆகணும்... சிரிப்புன்னா என்ன விலைன்னு கேக்கறவன்... சத்தம் போட்டு சிரிச்சு எங்களுக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வர வைக்கிறான்... இதுல அவன் கிண்டலடுச்சு என் வாயையே அடக்குறான்... பாரு தனியா உக்காந்து இருக்கான்னு சொல்லியே பத்து பேர அனுப்பிட்டான்... " என்று சுமி  பொறாமை போல் பேசினாலும் அவ்வளவு நிறைவாக இருந்தது அவள் நண்பனின் இல்லற வாழ்க்கையின் சந்தோஷத்தில்...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now