பகுதி - 46
அலுவலகத்தில் பெரிய பரபரப்பு... கேட்ட தகவலினால் அப்படியொரு கோபம் நிகிலுக்கு... நிதினுக்கு அழைக்க... அவன் வந்துவிட்டதாக கூறியிருந்தான் . பணியாளர்கள் அந்த ஐந்தாம் தளத்தில் லிஃப்டின் அருகே கூடியிருக்க... கம்பீரமாக கேஸூவல் உடையணிந்து வந்தவனை... அந்த அமலியிலும் பார்வையால் கபளீகரம் செய்த பெண்களும் உண்டு... செக்யூரிட்டி ஆஃபிஸரை நெருங்கியவன்... பிரச்சினை என்னவென்று கேட்க... பாறையாய் இருந்த முகம் காணவே அச்சமாக இருந்தது... லிஃப்ட் ஆப்பிரேடருக்கு...
ஸார்... என்று கை பிசைந்தவர்... நேற்று ஓவர்லோடின் காரணமாக பழுதாகி இருந்த லிஃப்டை தன் சோம்பேறித் தனத்தினால் காலையில் கவனத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டவன்... இன்று வந்தவுடன் வேலையில் இறங்க நினைத்து.. அன்டர் மெயின்டனெஸ் என்று பேப்பரை கதவில் ஒட்டினான்... இரு கதவுகளிலும் இணைத்துவாறு நடுவில் ஒட்டாமல்... ஒருபக்கமாக ஒட்டி தவறிழைத்தது மட்டுமில்லாமல்... முதலில் செய்ய வேண்டிய.. பவர் ஆஃப் செய்யாமல் விட்டுவிட்டான் . அத்தோடு இல்லாமல் தனது சகாக்களோடு கதையடித்து கொண்டிருக்க... அந்த லிஃப்டிற்குள் கலை நுழைந்துவிட்டாள் .
" ஸார்... நா லேபில் ஒட்டீட்டு தா போனேன்... ஆனா கவனிக்காம அந்த பொண்ணு ஏறிடுச்சு... " என்று வெடவெடத்து கூற ... இதுவரை யாருக்கும் அது கலையென்று தெரியவில்லை .
" பவர் நிறுத்தாம எதுக்கு லேபில் ஸ்டிக் பண்ணின..." என்று கடிந்து கொண்டாலும்... உள்ளுக்குள் இருப்பவருக்கு எதுவும் அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்று எண்ணியவனாக... ரெஸ்கியூ டீமை பார்க்க... அவர்களும் முழு மூச்சில் மாட்டிய நபரை காப்பாற்ற போராடியவாறு இருந்தார்கள்...
கலை நுழைந்து ... அவள் இருக்கும் மூன்றாம் தளப்பட்டனை அழுத்த அதுவோ ஏழு என்று காட்டியது... அதை கவனிக்கும் நிலையிலும் அவள் இல்லை... மனம் இரணமாய் கிடக்க... அமைதியாய் நின்றிருந்தவளுக்கு... அதன் வேகமும் உணரவில்லை.. ஏழாம் தளத்தில் கதவு திறக்க... அரைகுறையாய் திறந்த கதவுடன் வேகமாக கீழ் இறங்கி ஒரு வேகக் குலுக்களோடு நின்ற பிறகே அவளுக்கு புரிந்தது... விளக்குகள் அணைத்து அணைந்து எரிய... விடாமல் அலாரம் அடிக்கவுமே ... எதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டாள்... ஆனாலும் விரக்தியின் உச்சத்தில் இருப்பவளுக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை...
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...