மயங்கி விழுந்தவளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல... அதிகப்படியான பிபியே இதற்கு காரணமாக அமைய.... கருவுற்றிருப்பதால் அதிக கவனம் தேவையாய் இருக்க....அவளது ஆரோக்கியமோ நேரெதிராக குறைந்திக்க... ஒருநாள் தங்கியிருக்கும் நிலை வர , மருத்துவமனையில் தங்க நேர்ந்தது .
அவளது மன அழுத்தத்தினால் உடல்நிலை மோசமானதே தவிர நலம் பெறவில்லை . ஒரு நாள் என்றது ஒருவாரமாகியும் அவளது நிலையில் மாற்றமில்லாமல் போக... கலையின் பெற்றோரை அழைத்து இதுவே தொடர்ந்தால் அவளுக்கோ அல்லது வயிற்றில் வளரும் குழந்தைக்கோ நல்லது அல்ல ... என்று கூறிவிட்டார் மருத்துவர் .
வாய் திறவாமல் மயங்கிய நிலையிலே தன்னைத் தானே வதைத்துக் கொள்ளும் மகளின் நிலையை காணவும் தாங்க மாட்டாதவராய் வெடித்திருந்தார் சாரதா , " போதும்... நிறுத்துங்க....என் பொண்ணுக்கு அப்புறந்தான் எல்லாம்.... நா பாத்துக்குறேன் ...என் புள்ள பாத்துக்குவான்...அவளுக்கு அவ குழந்தை வேணும்னா ...எதுவும் செய்ய கூடாது...அவ பிள்ளையை அவ வளத்துப்பா.." ஏனோ மகளின் தவிப்பு மட்டுமே அவருக்கு பெரிதாக தெரிய ... அவ்வாறு தன் தவிப்பை கோபமாக வெளிப்படுத்தினார் .
"என்ன உளறுற ...இந்த சமுதாயத்துல வாழ முடியுமா..அவளாள... அங்கீகாரம் இல்லாத குழந்தையை எப்படி தனியா வளக்க முடியும்...? எம்பொண்ணு... யாருகிட்டயாவது ஏமாந்திருந்தாள்னா இப்பவே அவன் கால்ல நான் போய் விழுவேன்...ஆனா அப்படியா அவளுக்கு நடந்தது.... அவதான் புரியாம பேசுறான்ன நீயுமா...? இல்ல... நம்மகிட்ட என்ன நடந்தது என்று இப்பவாவது சொல்றாளா...? சொல்லு...அவளோட பிடிவாதத்தில எங்கெயாவது அர்த்தம் இருக்கா..?", என்றவரிடம் நியாயம் இருக்க அமைதி காத்தார்.
"சரி... தாராளமா அவ குழந்தை பெத்துக்கட்டும்... ஆனா யாரு அதுக்கு காரணம்னு கேளு... இல்ல எப்படி இருப்பான்னாவது சொல்ல சொல்லு... மத்தத நான் பாத்துக்குறேன்..." என்றார் .
எதற்கும் பதிலளிக்க மறுத்தவளின் மீது கோபம் எல்லை கடந்தது... நாதனுக்கு....நந்தனை திருமணம் செய்து கொள்ள கூறிய போதும் பிடிவாதமாக மறுத்து விட்டாள் . நந்தனும் எவ்வளவோ தன் காதலை எடுத்து உரைத்த போதும் ...அவனிடம் கைக் கூப்பி மறுத்துவிட்டாள் .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...