பகுதி - 29
இருக்கும் குழப்பம் போதாதென்று... நந்தனின் பேச்சு ஒருபுறம் தலைவலியை கிளப்பியிருக்க... தன்னை அழைப்பதையும் காதில் வாங்காதவளாக... அவள் இருப்பதில்... நெருங்கிய சியாமளா... ஆதரவாய் அவள் தோள் தொட... திடுக்கென்று எழுந்தாள் .
" என்னாச்சு கலை... ஊருக்கு போறத பத்தி யோசிக்குறீயா..." , என்றார் மென்மையாக... அவள் அமைதியாக இருக்கவும்... "பயப்படாம நீ இரும்மா... நாங்க பத்திரமா பாத்துக்குறோம்... என் பேரன நான்... பாத்துக்க மாட்டேனா... " என்று வேதனையுடன் கேட்க...
" அச்சச்சோ... அப்படியெல்லாம்... இல்லமா... நா ... நந்துவ யோசிச்சேன்..." என்றதும்...
" நந்துவா... அவனுக்கு என்ன... ஏதாவது உன்ன திட்டினானா... "
" இல்ல.. இல்ல... " , அவசரமாக பதில் உரைக்க...
பின்பு முடிவுக்கு வந்தவளாய்... நந்தனுடன்... பள்ளியில் இருந்தே ஏற்பட்டிருக்கும் தோழமையின் உறவை பற்றி கூறியவள்... அவன் தன் மேல் வைத்திருந்த காதலை பற்றியும் மறைக்காமல் மெல்லிய குரலில் சொல்ல.. லேசான சிரிப்போடு... "இது எனக்கு ஏற்கனவே தெரியுமேம்மா... எங்க... எல்லாருக்கும் தெரியும்... ஆனா உன்னை பாத்தது இல்லை ... " என்றார் .
" ஓ...." , என்று யோசனை வேறோரு இடத்திற்கு தாவ... அதை கலைத்தது சியாமளாவின் குரல்...
" இப்போ எதுக்கு ம்மா... இதெல்லாம்... " என்று கேட்டதும்..
" இல்ல... நந்தாட்ட நான் மேரேஜ் பத்தி பேசினப்ப... கீர்த்தியான்னு கேட்டா.. அதுதான்... " என்றவள்... "கீர்த்திய அவனுக்கு பிடிச்சு இருக்குன்னு நினைக்கறேன்... " என்று அவள் கூற...
" அப்ப... அந்த பொண்ணையே பேசுவோம்... இவ்வளவு சந்தோஷமான விஷயத்துக்கு யாராவது இப்படி யோசிப்பாங்களா..." , என்று அவர் கூவ...
" இல்ல.. அது சரி வருமான்னு யோசிச்சேன்.... " என்றாள்...
" ஏன்..."
" நந்து அம்மா... வசதி எதிர்ப்பாப்பாங்க... அது ஒத்து வராது... ஆனா... அவன் வாயிலேருந்து ஒரு பொண்ணு ... கீர்த்தி ஏதோ ஒருவிதத்துல அவன் மனசுல இருக்கா போல.... அவனை கல்யாணம் பண்ணினா... கீர்த்தியால அவங்க வீட்டுல... எப்படி ..." மீண்டும் தன்னால் தன் நண்பனின் வாழ்வில் வேதனை அதிகரிக்குமோ என்று எண்ணியவளாய் ...
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...