பகுதி - 33
பதினேழு வயதில் அடிப்பட்டு இருப்பவனுக்கு நேர்ந்ததோ இருசக்கர வாகன விபத்து...
விபத்து நடந்த பையனுக்கு கீழ் தண்டுவடத்தில் முழுமையாய் சேதம் ஏற்பட்டிருந்தது... அதிக பட்சமாக... இன்னும் நான்கு மணி நேரம் நோயாளியை ஆப்ரேஷன் செய்யாமல் காத்திருக்க வைக்க முடியும்...
அவன் வருவதற்குள்ளாக அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு கட்டளை மேல் கட்டளை பிறப்பித்தது கொண்டிருக்க... சீனியர் நியூரோ சர்ஜனும் உடன் இருந்தார். அந்த பையனுடைய பிபி மற்றும் பல்ஸ் ரேட்டை மானிட்டரில் வைத்திருக்க... அவசரகாலத்திற்காக... ஆக்ஸிஜன் மாட்டப்பட்டிருந்தது...
Heavily risk என்னும் கண்டிஷனில் அவன் நிலையிருந்ததால்... சஞ்சயை அவர் நாட... மதி மேல் சுவர் என்ற நிலையில் இருந்தாலும்... இதுவரை எடுத்த ரிப்போர்டின் படி... அவன் உயிர் பிழைப்பதற்கு மட்டுமல்ல... இடுப்புக்கு கீழ் செயல் இழந்து போகாமல் இருப்பதற்கு உண்டான... அந்த ஒரு சதவீத வாய்ப்பை விட மனம் இல்லாதவனாய்... வந்து இறங்கிவிட்டான் .
அவசர அவசரமாக அந்த பையனை பரிசோதனை செய்த பின்... அறுவை சிகிச்சைக்கு ஆயுத்தமாக வெளி வருகையில்...
" ஹல்லோ ஸார்..." என்று நிகிலை மறைத்தபடி ஒரு இளைஞன் நிற்க... இருக்கும் அவசரத்தை முகத்தில் காட்டாமல்... " எஸ்..." என்று நிதானித்தவனிடம்...
" ஸார்.. இங்க என்ன நடக்குதுன்னு.. தெரிஞ்சுக்கலாமா... நான் இனியனோட சித்தப்பா..." என்று அறிமுகம் செய்ய... அருகே நின்றிருந்த துணை மருத்துவரை பார்த்தான் ...
" ஸார்... நாங்க explain...." என்று தொடங்கியவரை இருப்பதாகவே நினைக்காமல்
" எப்ப ஸார் ... யார் யாரோ வராங்க... போறாங்க... இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டு... என்னன்னமோ சொல்றீங்க... நாங்க என்ன நினைக்கிறது... சின்ன கீறல் கூட அவன் மேல இல்லையே ஸார்... " என்று துக்கத்தை கட்டுப்படுத்தியவனாக வினவ...
" முன்னாடியே இவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணலையா... " என்று கடித்து துப்பியவன்... மணியை திருப்பி பார்த்து...
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...