உணர்விலே கலந்தவனே - 40

2.5K 60 5
                                    

பகுதி - 40

என்றும் போல் அலுவலகத்திற்குள் நுழைய... கேட் அருகிலேயே உடன் பணியாற்றும் தோழி மதுமிதாவை பார்த்துவிட்டாள்...

மது என்றழைக்க... வண்டியை பார்க் செய்து திரும்பியவளின் முகமும் மகழ்ச்சியை வெளிப்படுத்துவதாய்...

" இன்னைக்கு பரத் வராரா.. "என்று கேட்டதும்...

" இல்லக்கா... பத்து மணிக்கு ராதிய பொண்ணு பாக்க வரதா.. சொன்னான்... " என்றாள் ..

ஓ... என்று லிஃப்டை நோக்கி பயணிக்க... முதன்முதலில் இங்கு இன்டர்வூவிற்கு வந்த போது... தனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று ஆயிரம் சஞ்சலங்களோடு அடி எடுத்து வைத்தது நினைவு வர... மெல்லிய புன்னகையை இதழ் வரவேற்பு புரிய நின்றிருந்தவளை...

" என்னக்கா…"  மதுமிதா கேட்க...

" இல்ல.. ஃப்ஸ்ட் டைம் இங்க வந்ததப்ப.. எவ்வளவு நெர்வஸா இருந்தேன் தெரியுமா... பாரு வேலை பாக்குற இடத்துக்கு வந்த மாதிரியா இருக்கு... " என்று இன்று வரை எழும் பிரம்பிப்பை மறைக்காதவளாய் கூறி லிஃப்டிற்காக காத்திருக்க...

இருவரும் பேசிக் கொண்டே இருக்கையில்... பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரின் வருகை அதிகரித்தபடி இருக்கையில்... பரத்தும் வந்துவிட்டான்...

" ஹாய் காய்ஸ்.."  என்று உற்சாக குரலோடு அனைவரையும் பார்த்து வரவேற்றவனை...

" நீங்க வரலேன்னு சொன்னா…" என்றாள் கலை

" ஆமாங்க... ஆனா ஈவ்னிங் மாத்தியாச்சு... ஸோ... மூனு மணிக்கு எஸ்கேப்.."  என்று கூறி... சிரித்தான்

லிஃப்ட் திறந்து கொண்டது... எவ்வளவு படித்திருந்தாலும் நாகரிகமாக உடை அணிந்து கொண்டு நுனி நாவில் ஆங்கிலம் பேசினாலும் பிறவி குணம் மாறவே மாறாது நம்மவற்கு... முண்டியடித்து... செல்வதில்... என்னமோ அந்த ஒரிரு நிமிடங்களில் தான் தாமதம் ஏற்படுவதாக நினைப்பு... கலையை பற்றி நன்கு அறிந்திருந்த இருவரும் அவளை கிண்டல் செய்த படி தேங்க... அருகிலேயே இருந்த மற்றொன்று வரவும்... நிதானமாக ஏறினார்கள்...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora