கசக்கி எறிந்ததை பத்திரப்படுத்தி வைத்திருப்பாள் போலும்... அந்த காகிதத்தை என்ன என்று பார்ப்பதற்குள்ளாக கலையின் அரவம் அருகில் கேட்க... தன் சட்டை பையில் திணித்து அவள் அறியாமல் பத்திரப் படுத்திருந்தான் நந்தன் . ஆனால் அங்கிருந்த வரை படிக்கவே முடியவில்லை.... தன் பெரிய அன்னையின் இல்லத்திற்கு பயணிக்கையில் நினைவு வர... அதனை எடுத்து படிக்க தொடங்கினான்... படிக்க...படிக்க கண் பளபளக்க... துடித்த உதடுகளை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருந்தான் என்பது அவனுக்கே அறியாத ஒன்று...
எழுத்தில் படிந்திருந்த கண்ணீர்... அவள் தன் மேல் கொண்ட நட்பின் ஆழம் புரிய... தனக்காக தவிக்கும் தவிப்பை அழகாக உணர்த்திட... நெஞ்சுருகி நின்றான் .
காதல் தோல்வி சுகம் தருமோ... ஆனால் அவன் சுகம் கண்டான்....
காதலில் தோற்று... நட்பில் உயிர்தெழுந்தான்.... அவள் மீதான காதலுக்கு...அவளே மருந்தானாள்...நட்பென்னும் கழும்பினால்... அதை சுகமாய் ஏற்றான்... ஆண்ணவன் மெல்லிய உணர்வை அழகாய் படித்து...அவனை மீட்டுக் கொண்டிருக்கிறாள் அவளது நட்பு தவிப்பின் மூலம்.... என்றும் நீ வேண்டும் எனக்கு... நான்
தோல் சாய...உன் மடி சாய... என் உயிர் தோழனாய்.... என்று...நட்பில் காதல் மலரும்... ஆனால் காதலில் நட்பு மலருமா...?
மலரும்....பூத்து குலுங்கும்....
அதற்கு இலக்கணமாய்...
நந்தனும் கலையும்.....மனம் கனக்க பயணித்தவன்... வீடு வர... வேலையாள் மட்டுமே இருக்க... வீட்டில் ஒருவரும் இல்லை என்று அறிந்தவனுக்கு ஆறுதலாக அமைந்தது... தற்போது இருக்கும் மனநிலையில் ஒருவரிடமும் இயல்பாய் இருக்க முடிந்திருக்காது...என்பது நன்கு புரிந்து போக....
சரி என்று வேகமாக சென்றவனோ படியேறி தான் பயன்படுத்தும் அறைக்குள் நுழைந்து... மெத்தையில் விழ... உறங்கிவிட்டான்...
கடைக்குச் சென்றவர்கள் பத்து மணிக்கு மேல் வர... அவன் வந்ததை அறிந்து கொண்டாலும் சாத்தியிருந்த கதவை தட்டாமல் .... காலையில் பார்த்துக்கலாம் என்ற முடிவில் தொந்தரவு செய்யவில்லை ...
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...