பகுதி - 37
நந்தனின் குரலே கீர்த்தியை இம்சிக்க... ச்சே... எப்படி தான் என்னை குழப்புறதுல ரெண்டும் ஒத்துமையா இருக்குதுங்களோ... என்று தனக்குள்ளே இருவரையும் நினைத்து புலம்பியவளை சியாமளாவின் அழைப்பு நடப்புக்கு திருப்ப... வேகமாக கீழ் இறங்கியவளை விழி அகற்றாமல் சிறை செய்தான்... வீட்டைவிட்டு கிளம்பும் வரை...
கவிதா... தனக்குள் புன்னகைத்துக் கொள்ள.. பாலாவோ... நடத்துடா மகனே நடத்து என்று கண்டும் காணாமல் இருக்க முயற்சித்தான்... இவனுடைய அலைவரிசையை அவனிற்கும் கடத்திவிட்டான் போலும்... பாலாவின் விழிகளிலும் மாற்றம் வர... தோசை கரண்டியை காண்பித்து அணைப் போட்டாள்... அவனுடைய சரிபாதி....
இவர்கள் அனைவரையும் கண்டும் காணாமல் பார்த்திருந்த சியாமளா தேவியின் உள்ளமும் குளிர்ந்திருக்க... சீக்கிரமா இருவரின் வாழ்க்கையும் சீராக வேண்டும் என்று உளமாற பிராத்திக்கவும் மறக்கவில்லை .
செய்யும் வேலையில் கவனம் பதியாமல் கீர்த்தியை பற்றிய நினைவிலே இருந்தவனின் முகத்தில் குடியிருந்த புன்னகையும்... கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிரித்தவனின் செயலில்... அவனுடைய பிஏ திருதிருவென்று முழித்து தயக்கமாக... அழைக்க...
" கொஞ்ச நேரம் என்னை டிஸ்டர்ப் செய்யாம போங்க... எதாயிருந்தாலும் 2 ஹார்ஸ் போஸ்பான்ட் பண்ணுங்க..." என்று அனுப்பியவனை வேற்று கிரகவாசி போல் பார்த்தே வெளியேறினான்...
தன் அலைபேசியை கையில் எடுத்தவன் வேகமாக... ஹோம்ஸ்க்ரீனில் இருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்க்க... அழகாய் வெண்பற்கள் தெரிய புன்னகையை புரிந்திருந்தாள் . தன் கட்டைவிரல் கொண்டு மென்மையாக அச்செவிதழ்களை வருடியவனுக்கு என்னவோ நேரிலேயே மனைவியை தீண்டிய களிப்பு....
அதேநேரம் கீர்த்தியும் அவனைப் பற்றியே சிந்தித்தவளாய்... கீழ் உதட்டை தன் விரல்கள் கொண்டே கசக்கியவளாய் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு... அன்று கலையின் அறையில் அவன் பேசியதே பேரிரைச்சலாய்...
ESTÁS LEYENDO
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...