உணர்விலே கலந்தவனே - 12

2.1K 53 2
                                    

கலை... வீடு வருகையில் மணி மூன்றை கடந்திருந்தது... ஒரு அரை மணிநேரம் கடந்த நிலையில் , கீர்த்தி வந்துவிட்டாள் அவளது வீட்டிற்கு...

" ஹேய் வீடு சுத்தம் செய்யனும் னு சொன்ன... எல்லாம் அப்படி அப்படியே இருக்கு..." என்றாள். இவளிடம் சொல்ல முடியுமா... அஷ்வந்தை பார்க்க போனதை...
"முடியலைப்பா... அதுனால படுத்துட்டேன்..."

" ஏன் கலை இன்னைக்கு dutyக்கு போகலை...நிறையா லீவ் எடுக்குற... அதுவே teamல complain rise பண்ணியிருக்காங்க... இன்னைக்கும் நீ போகலை... எப்படி சமாளிக்க போற‌‌... "

தோழியின் சூழ்நிலையறிந்ததால் மிக கவலையாக வினவினாள்... அவளது அக்கறையில் நெகிழ்ந்தவள்... சன்னமா இதழ் சிரித்து ,

" வேற வேலைக்கு try பண்ணீட்டு இருக்கேன்..."

" என்ன.... ஏன்..."

" முடியல கீர்த்தி அவனுடைய டார்ச்சர்..." , உடன் பணியாற்றும் பொறுக்கியால் இந்த முடிவு என்றாள் .

" எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா... புது இடத்திலையும் problemன்னா அங்கேயும் வேலைய விடுவியா...? "
அவளிடம் பதில் இல்லை...

நடந்ததை கீர்த்தியிடம் கூறவும் விருப்பமில்லை....

" ச்சே... ஏன் கலை இவனுங்கயெல்லாம் இப்படி இருக்கானுங்க... " என்றவளிடம்

" யாரை சொல்ற...? "

" வேற யாரு... உன்கிட்ட வாலாட்டற பொறுக்கியும்... என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் திரிஞ்ச பொறி..க்.. " என்று முடிப்பதற்குள்ளாக...

" கீர்த்தி... " தன் குரலை உயர்த்தியிருந்தாள் கலை .

" யாரை... யாரோட சேத்து பேசுற... அஷ்வந்தும் அந்த நாயும் ஒண்ணாயிட முடியுமா.... " என்று தன் கோபம் குறையாமல் வாதாடியவளிடம்

" ஏன்... அவன் என்ன யோக்கியம்... என்னை marriage பண்ணிக்கிறேன் ஏமாத்தினவன் தான‌‌.... நீ ஏன் அவனுக்காக பேசுற " என்றாள் கீர்த்தி கோபம் குறையாமல்...

" உளறாத கீர்த்தி... அந்த பண்ணாடையோட compare பண்ணாதன்னு தா சொல்றேன்..."

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now