அந்த இடத்தை அடைந்ததும்... வேகமாக மேல் தளத்திற்கு விரைந்தவள்... சுற்றி விழிகளை சுழலவிட... எதிர்பார்த்த நபரை காணவும்.... அவர்களை நோக்கி விரைந்தாள் .
அவனும் அவளது வரவை கண்டவன்... கை அசைத்து தன் இருப்பை உணர்த்த அவ்விருவரையும் நோக்கி நடந்து வந்தவளின் கால்களில் இருந்த வேகம் தடைபட... சுளித்த புருவங்களுடன் நெருங்கினாள் .
அந்த மேஜையை நெருங்கியதும்... கண்ணுக்கு எட்டாத சிரிப்பொன்றை உதிர்த்தவன் ... அருகில் இருந்தவளை பார்த்தான் .
அது சொன்ன சேதியில் மௌனமாய் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டாள் அந்த பெண் .அந்த பெண்ணை பற்றி ஒரு யூகம் இருந்த போதும் யாரென கேட்கவே இல்லை . உதட்டில் உறைந்த புன்னகையுடன் " எப்ப வந்தீங்கண்ணா..." என்றாள் .
" Two months மேல ஆச்சு கலை... நீங்க எப்படி இருக்கீங்க..." என்றவனின் விழிகள் கலையின் முகத்தை சந்திக்க தயங்கியது .
" எதுக்காகண்ணா..." என்று நேரடியாய் கேட்கவும்... விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவனின் கண்களின் வெள்ளித்திரையில் நீர் சுழ்ந்திருந்தது... அதை மறைக்க பாடுபட்டவன் வெற்றியும் கண்டான் அஷ்வந் .
தன் முகத்தில் எதையும் காட்டாமல் தீர்க்கமாக பார்த்தவளை பார்க்க முடியாமல் தலை குனிந்தவன் முடிவெடுத்தவனாய் மீண்டும் கலையை பார்த்து " தேங்க்ஸ்..." என்றான் நெகிழ்வாக...
ஏன் இப்படி செய்தாய்... என்று கேளாமல்... எதுக்காக என்று கேட்டதில் அவன் கனத்த மனதிற்கு இதமாகவே இருந்தது.. இந்த கேள்வியை கீர்த்தி கேட்டிருக்க வேண்டும்.... என்று எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை
" கீர்த்தி... என்ன சொன்னா..." என்றவனுக்குவர வைக்கப்பட்ட சிறு இதழ் சிரிப்பில்... " நீங்க என்ன அவ சொல்லணும்னு நினைச்சீங்களோ அத சொன்னா..." மௌனமாய் இருந்தவனிடம்... " நீங்க அவள எந்த அளவுக்கு விரும்புனீங்கன்னு அவளுக்கு வேணா தெரியாது ஆனா எனக்கு நல்லாவே தெரியும்... அதுனால தான் விஷயம் கேள்விப்பட்டதும் உங்கள நேர்ல பாக்க.. முடிவெடுத்தேன் " .
أنت تقرأ
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
عاطفيةதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...