உணர்விலே கலந்தவனே -16

2.1K 60 2
                                    

என்றுமில்லா புத்துணர்ச்சியில் கலை திளைத்திருக்க.... அவர்கள் சென்றடைய வேண்டிய இடம் வரவும்... இறங்கி... அந்த ஹோட்டலின் அமைப்பில் பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை .

அவர்கள் மூவரும் .. invitation இருந்தமையால் நுழைய‌ அங்கிருக்கும் volunteer வழிகாட்டிட... அதிசியத்தவாறே விழிகளை சுழற்றி வேடிக்கை பார்த்த வண்ணம் செல்ல... காத்திருப்பு அறையில் கலையும் கீர்த்தியும் அமர வைக்கப்பட... தேவ் போட்டி நடக்கும் இடத்திற்கு அனுப்பப்பட்டான் .

போட்டி அறைக்குள் செல்வதற்குள்ளாக தன் அன்னையிடம் இருந்து ஆயிரம் all the bestகளும்... லட்ச முத்தங்களுடனும்...

" தேவ் tension ஆகக் கூடாது..‌ relaxடா வரையணும் .... யாருடையதையும் என்னப் பண்றாங்கன்னு பாக்கக்கூடாது... கவனம் சிதறும்... So உன் வேலைல மட்டும் கவனமா இருக்கணும்.... கலர் மெட்டீரியல் எதுவும் தொலையக்கூடாது.... பக்கத்துல உள்ளவுங்க கிட்ட உன்னோடத ஷேர் பண்ணிணாலும் திரும்ப வாங்கிக்கணும்... நீ யார்கிட்டேருந்தும் வாங்கக் கூடாது... அம்மா... நீ கேட்டது எல்லாம் வாங்கி தந்துருக்கேன்.‌... இருக்கறத வச்சு use பண்ணணும்... ஆங்... அப்புறமா dark பென்சில் sketch பண்ணாத..‌‌ impression heavy விழும் அழிக்க கஷ்டமா போயிடும்.... ம்..ம்... அப்புறம்.... " அடுக்கியவளிடம் இருந்து...

" அப்பா... புண்ணியவானே... நீ.. ம்.. கொட்டுனதும் போதும்.... உங்க ஆத்தா adviceன்ற பேர்ல கழுத்த அறுக்கறதும் போதும்.... உள்ளப் போடா...ராசா‌.... " என்று வலுக்கட்டாயமாக... அவளிடமிருந்து பிரித்து அவனை உள்ளே அனுப்பினாள் . அவளும் " all the best கண்ணா.." என்று கூறி.. இதழ் பதிக்க மறக்கவில்லை .

அவன் தாய் கூறிய வார்த்தைகளை... கவனமாக உள் வாங்கிய பாலகனோ... அவ்வாறே நடந்து கொண்டான் .

மூன்று மணி நேரப் போட்டியாதலால் கீர்த்தியும்.. கலையும்.. பல கதைகள் பேசியவாறு இருக்க..‌ அந்த இடத்தின் அழகும்... எதிர்திசையில் இருக்கும் தோட்டத்தின் அழகும்... இருவரையும் சுற்றிப் பார்க்க தூண்டியது .

அதனால் இருவரும் பேசியபடி சுற்றி வந்தார்கள் .

" ஹேய் கலை... உன் பையன் புண்ணியத்தில இந்த ஹோட்டலுக்குள்ள நுழைஞ்சாச்சு ...." என்று கூறியவளை சிரிப்புடன் ஏறிட , மேலும் தொடர்ந்தவளாக...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant