உணர்விலே கலந்தவனே - 60

4.7K 116 132
                                    

பகுதி - 60

*** " சுமி... எங்க இருக்க..‌. வீட்டுக்கு போக முடியுமா... " என்று அவசரகதியில் சஞ்சய் பேச... சிறு பதட்டமும் அந்த குரலில் காணப்பட்டதோ...

" நீ எங்க இருக்க... " என்றாள் சுமி அவள் வாகனத்தை இயக்கியவாறே... அவன் வீட்டிற்கு தான் சென்று கொண்டு இருக்கிறாள் .

" ஹாஸ்பிடல்ல... எமெர்ஜென்ஸி... ரொம்ப டல்லா தெரியுறா... கேட்டா... ஒன்னுமில்லை நீங்க கிளம்புங்க சஞ்சய்ன்னு அனுப்பீட்டா... இங்க நத்திங் ஸீரியஸ்... பட் என்னால... உடனே கிளம்ப முடியாது..." என்று தன் மனைவியை பற்றிய கவலை அதிகம் மேலிட்டவனாக ஆதங்கத்தை வெளியிட...

" ஹேய்... ரிலாக்ஸ்மேன்... நான் 5 மினிட்ஸ்ல போயிடுவேன்... " என்று வைத்தவளுக்கு மலரும் இதழ்களை மறைக்க முடியவில்லை...  இவன் வாய் திறந்தால் ஆகாதா என்று எண்ணிய கடுப்பான நாட்களை நினைத்து.‌‌.. அவள் அறிந்த சஞ்சய் இவ்வளவு பேச மாட்டான்... ஒருவேளை அவன் வீட்டில் தான் இருக்க வேண்டுமானால் "போ" என்பது மட்டுமாக தான் இருக்கும்... இவ்வளவு விளக்கங்களுக்கோ... ஏன் தன் பதிலுக்கும் கூட இடமில்லை...

கோவையில் அவன் அப்பார்ட்மெண்ட் முன் நின்று கதவை தட்ட... மேடிட்ட வயிறோடு... அசைந்தாடி வந்தவள் திறந்ததும்...  அவளிடம் காணப்பட்ட சோர்வும்... வாட்டமும்... மகப்பேறு மருத்தவராய் இருப்பவளுக்கு புரிந்து போனது... சுமி வாய் திறப்பதற்குள்ளாக...

" உனக்கு தான் போன் பண்ண நினைச்சேன்... அவங்களே பண்ணீட்டாங்களா... " என்றவளின் வதங்கி முகத்திலும் வழிந்தது பூரிப்பு...

" பெயின் வந்துடுச்சா... ரொம்ப டல்லா தெரியுற.,." என்றாள்

" ஆமா... பெயின் உடனே உடனே வர மாதிரி இருக்கு... செக் பண்ணி பாரேன்... " என்றபடியே மெதுவாக படுக்கையறைக்குள் நுழைந்தவளை தொடர்ந்த சுமியின் கைகளில்... க்ளொஸை கொடுத்து... அதோ அதுல ஹாட் வாட்டர் இருக்கு... என்று படுத்துக் கொண்டாள்...

" ப்ரிப்பேரா இருக்க... வலி நெருக்கமா வருதா..." என்றவள் கையுறையை மாட்டிக் கொண்டே கேட்டிட...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt