உணர்விலே கலந்தவனே - 47

2.6K 62 7
                                    

பகுதி - 47

கீர்த்தியோ கலையை பார்த்ததில் இருந்து எண்ணெயில் இட்ட அப்பளமாக பொறிந்து கொண்டேயிருந்தவள்... நந்தனை தேடி சென்று காரணம் கேட்க... அழுத்தமாக... மிக மிக அழுத்தமாக மனைவியை ஏறிட்டவன்...

" நேசிக்க தெரியாதவங்க மேல அதிகமா பாசம் வச்சா இதுதான் நிலைமை... " என்று கூறவும்... வேகமாக அவனை உரசும் அளவிற்கு நின்றவள்...

" இப்ப என்னை குத்திக்காமிக்கிக்கிற நேரமா இது..."  என்று நக்கலாக கேட்க...

" குத்திக்காமிக்கிறேனா... உண்மைய சொல்றேன்... " என்றான்

" ஆமா.. ஆமா... பெரிய உண்மை விளம்பி...  கேக்குறதுக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க... என்னாச்சு.. ஏன் அவ இப்படி இருக்கா..." என்றாள் மீண்டுமாக...

அமைதியாய் வேறுபுறம் திரும்பி நின்றவனை மேலும் தொந்தரவு செய்யவும்...

" நீ... என்னை கொன்ன... என் அண்ணகாரான்... அவளை கொன்னுட்டான்... வேற என்ன..."  என்று ஆத்திரத்தில் வெடிக்கவும்...

ஒரு நொடி அமைதியில் கழித்தவள்... தனக்குள்ளாக...  செய்த செயலின் தாக்கத்தினால் வருந்தினாலும்... அவனிடம் வெளிப்படுத்தாமல் இயல்பு போல்...

" எத்தனையோ தடவை மன்னிப்பு கேட்டாச்சு... இதோ திரும்பவும் கேட்டுட்டு நிக்கிறேன்... இன்னும் என்ன பண்ணினா உங்க கோபம் போகும்னு சத்தியமா எனக்கு புரியலை... தெரியாமதா கேக்குறேன் இப்ப எதுக்காக நம்ம பிரச்சனைய இதுல கோத்துவிட்றீங்க... " என்று தன் அடாவடியை தொடங்கவும்...

மனதில் இருந்த புழுக்கம் சற்று குறைந்தது போலவே இருக்க... வர துடிக்கும் சிரிப்பை.. மறைத்து நின்றவனை தன்புறம் திருப்பி...

"மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன்... மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்... இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது... " என்று தலையில் அடித்து நின்றவளை...
எப்பொழுதும் போல் வாய் மூடாமல் பார்த்து நின்றான்...

" உங்ககிட்ட போய் கேக்க வந்தேனே என்னை சொல்லணும்... நா அவகிட்டயே பேசிக்கிறேன்..." என்று திரும்பி செல்ல எத்தனிக்க...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ