பகுதி - 38
பேதையவளுக்கு… அவனை எதிர் கொள்ளும் சக்திகளற்று போக… அறையிலேயே முடங்கிக் கொண்டாள்.
அவள் வருவாள் என காத்திருந்தவனின் எண்ணத்தை பொய்யாக்கியவள் மீது செல்லக் கோபம் எழ… தேடி போக முடியாத அளவிற்கு வேலையும் அழைக்க… வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று மர்மப் புன்னகையை தனக்குள் புதைத்து… தமயனுடன் வெளியேறிவிட்டான் நிகில் .
கீர்த்தியின் வார்த்தைகள் அதிகமாய் வெட்கம் கொள்ள வைத்ததென்றால்… அவனுடைய வார்த்தையில் இருந்த கிண்டல் அதிகமாய் துவளச் செய்ய… தன் முழங்காலில் கன்னத்தை பதித்து… வழிந்தோடும் விழி நீரோடு… பதுமைச்சிலையாய் உருமாறி அமர்ந்த நிலையிலே இருக்க… அவளது தவத்தை கலைக்கவெனவே தியா குட்டி வந்துவிட்டாள் .
மூன்று வயது சிறுமிக்கான துள்ளல் நடையில் தெரிய… ம்..மா… என்று பிள்ளை மொழியில் அழைக்க… காலை முதல் கருமேகமாய் சூழ்ந்திருந்த குழப்பங்கள் யாவும் விலகி… மலரும் சூரியகாந்தி பூவாய் தன் மகளை கையில் ஏந்தியவளுக்கு ஏற்பட்ட ஆறுதலுக்கு அளவேயில்லை… இனி ஒருவருக்கும் எங்க உலகில் அனுமதி இல்லை என்று அவ்விருவர் மட்டுமே… சஞ்சரிக்க… நிகலை தியாவின் ஒளியில் சிறுது நேரத்திற்கு மறந்திருந்தாள் கலை…
காலை முதல் வயிறு காலியாய் கிடக்க… தியாவிற்காக என்று வந்தவளுக்கு அதுவரை தன் இருப்பிடத்தை வெளிப்படுத்தாத வயிறு… பல மேளதாளங்களை முழக்க… அவளுக்கும் தட்டில் நிரப்பி… உண்டு முடித்தார்கள் . குழந்தைகள் பள்ளியில் இருக்கும் வரை மட்டுமே பொழுதுகள் நம் கையில்… அவர்கள் வீடு திரும்பிய பிறகோ அனைத்தும் அவர்களுக்கே சொந்தம்… அதில் ஆனந்தத்தில் திளைப்பவர்களும் உண்டு… சலிப்பவர்களும் உண்டு… நம் கலையோ முதல் ரகம் .
அவளோடிருந்த பொழுதுகள் இனிமையாய் கழிய… விளையாடி… பள்ளியில் கொடுத்த பணித்தாள் செயல்பாட்டை (worksheet activity) முடித்து… இரவு உணவையும் கபளீகரம் செய்த பின் தியாவிற்கு மிகவும் பிடித்தமான இடத்திற்கு அழைத்துச் சென்றாள் . அவளது கவனம் என்றும் செய்கை குளத்தில் என்றால்… மாளிகையை சுற்றியிருக்கும் தோட்டம் அல்லாது அதன் மேலேயே அமைந்திருக்கும் ரூப் கார்டன்… மிகவும் பிடித்தமானதாக இருக்கும் தியாவிற்கு...
BINABASA MO ANG
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...