பாகம் 13
குமணன் இண்டஸ்ட்ரீஸ்
தன் கையில் இருந்த ஃபைலை தூக்கி எறிந்து, தன் கோபத்தை, தனது மேலாளர்கள் குழுவிடம் காண்பித்தார் குமணன். அவர் அடிபட்ட பாம்பாய் சீறினார்.
"இது எப்படி நடந்துச்சி? இப்படி நடக்கிறதுக்கான சாத்தியக்கூறுகள் என்ன? நம்மளுடைய கம்பெனி கவர்ல எப்படி மட்டமான சோப் வந்தது? என்னால இதை நம்பவே முடியல. நான் இந்த விஷயத்தை கண்டுபிடிச்சி ரெண்டு நாள் ஆச்சி. இன்னும் நீங்க எல்லாருமே பிளாங்கா இருக்கீங்க"
"நம்மளோட வியாபாரத்தை விழ வைக்க, நம்முடைய எதிரிங்க தான் சார் இதை செஞ்சிருக்கணும். அவங்க தான், லோ குவாலிடி சோப்பை நம்மளுடைய கவர்ல மாத்தியிருக்கணும்"
"அப்படின்னா நம்மளுடைய ஒர்க்கர்ஸ் என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?"
"சார், நம்மளுடைய ப்ராடக்ட் உலகமெல்லாம் டிராவல் பண்ணுது. நம்ம கம்பெனியை விட்டுப் போற ஒவ்வொரு பண்டலயும் மானிட்டர் பண்றது ரொம்ப கஷ்டம் சார்."
"உங்களுடைய எக்ஸ்கியூஸை கேக்க நான் இங்க வரல. நீங்க என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது. இது எப்படி நடந்துச்சுன்னு எனக்கு தெரிஞ்சாகணும். இல்லன்னா, நம்ம எல்லா கான்ட்ராக்டையும் லாஸ் பண்ண வேண்டியது வரும். இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?" என்று எகிறிகுதித்தார் குமணன்.
"உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணலாமா?" என்ற குரலைக் கேட்டு, திடுக்கிட்டு திரும்பினார் குமணன்.
கண்ணாடி கதவின் வழியாக அவரை பார்த்து சிரித்தான் கார்த்திக். சற்று நேரத்திற்கு முன் தனது பணியாட்களிடம் காட்டிய கோபத்தை மறைத்துக் கொண்டு, அவனை பார்த்து புன்னகை புரிந்தார் குமணன்.
"நீங்க பேசிக்கிட்டு இருந்தை நான் கேட்டேன். அதை நான் கவனிச்சுக்கிறேன், அங்கிள்"
"உன்னால முடியுமா?" என்றார் குமணன்.
"என்னால முடியாதது எதுவுமே இல்ல" என்று சுய பிரதாபம் பாடினான் கார்த்திக்.