Part 61

1.6K 101 8
                                    

பாகம் 61

நிமலின் கண்கள், வர்ஷினியின் பக்கம் அனிச்சையாய் திரும்பியது. சுபா நிமலை கட்டி அணைத்ததை பார்த்து, வர்ஷினி அதிர்ச்சி அடைந்தாள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. சுபாவை பிடித்து தள்ளினான் நிமல்.

"யார் நீ?" என்றான் அவனுக்கு அவளை தெரியாததைப் போல.

"ஐ அம் சாரி... உன்னை பார்த்த சந்தோஷத்தில் நான் யாருன்னு சொல்ல மறந்துட்டேன். நான் சுபா. குணசேகரனுடைய டாட்டர்"

அதைக் கேட்டவுடன் வர்ஷினிக்கு தூக்கிவாரிப்போட்டது. அந்த சண்டாளி இவள் தானா? என்றெண்ணி பல்லைக் கடித்தாள்.

"ஓ..." என்றான் நிமல் ஆர்வமில்லாமல்.

"எப்படி இருக்க நிமல்?"

"குட்... நீ ?"

"கிரேட்... நீ செத்துட்டேன்னு நினைச்சேன். நீ உயிரோட தான் இருக்கேன்னு எங்க அப்பா சொன்னப்போ நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா?" என்றாள் ஆர்வ மிகுதியுடன்.

வர்ஷினியை பார்த்து தன்னிடம் வருமாறு சைகை செய்தான் நிமல். ஓடிச்சென்று அவன்ருகில் நின்று கொண்டாள் வர்ஷினி.

"இவங்க என்னுடைய வைஃப், வர்ஷினி. குமணனுடைய டாட்டர்"

"ஓ... ஹாய்..."

"ஹாய்" என்றாள் வர்ஷினி.

"எனக்கு டைம் ஆகுது... நான் கிளம்பனும்" என்றான் நிமல்.

"இன்னைக்கு நைட், டின்னருக்கு போகலாமா?" என்றாள் சுபா.

"இன்னைக்கு நான் ரொம்ப பிஸி" என்றான்.

"நாளைக்கு?"

"ஆக்சுவலி, எனக்கு டைம் கிடைச்சா, என் ஃபேமிலியோட தான் ஸ்பென்ட் பண்ணுவேன்"

"நீ ரொம்ப மாறிட்ட"

"மாறித் தான் ஆகணும். ஏன்னா, நம்ம இன்னும் குழந்தைங்க இல்ல. எனக்கு பர்சனல் லைப் இருக்கு... புரிஞ்சுக்கவேன்னு நினைக்கிறேன்"

"அஃப் கோர்ஸ்... எல்லாருக்கும் இருக்கு... ஆனா, பிரெண்ட்ஸ்காக கொஞ்ச நேரம் ஒதுக்குறதுல தப்பில்லையே..."

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora