Part 5

2K 100 8
                                    

பாகம் 5

கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு தன் அறையில் அமர்ந்திருந்தான் நிமல். ஆனால், அவனது பார்வை என்னவோ ஜன்னல் வழியே கண் சிமிட்டிக் கொண்டிருந்த வானத்து நட்சத்திரங்களின் மீது தான் இருந்தது. அந்த நட்சத்திரங்களுக்கு இடையில் அவனுக்கு வர்ஷினியின் முகம் வந்து போனது. அவளை நினைத்த மாத்திரத்திலேயே அவன் இதழ்கள் புன்னகை பூத்தன. இன்று, அவனுடைய நண்பர்களிடம் அவனுடைய காதலை பற்றி கூறியதை நினைத்து அவனே அதிசயித்தான்.

*காதல்* ஒரு அற்புதமான உணர்வு. தன்னிடம் தஞ்சம் அடைந்தவர்களை அது தெளிவாக சிந்திக்க விடுவதில்லை. தன்னிடம் விழுந்தவர்களை அது தலைகீழாக மாற்றி விடுகிறது. அதில் தவறு இருப்பதாக நிமல் நினைக்கவில்லை. காதல் இன்பத்தை அளிக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்கிறது. காதலித்தால் இதெல்லாம் நடக்கும் என்பது கூடத் தெரியாமல் இருந்தான் நிமல். தன் மீதே கூட ஒரு நாள் காதல் மழை பொழியும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

*வர்ஷினி* பார்த்த சில நாட்களிலேயே அந்தப் பெண் எப்படி தன்னை கட்டிப் போட்டுவிட்டாள்...! உண்மையில் கூறப்போனால் அவள் எதுவுமே செய்யவில்லை. இவன் தான் விடாபிடியாக அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறான். அது, அவன் முன்பு எப்பொழுதும் செய்திராத ஒன்று. அவனைத் தன்னை நோக்கி இழுக்கும் காந்த சக்தி அவளிடம் இருக்கிறது என்று நினைத்தான்.

சட்டென்று அவன் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ஒருவேளை வர்ஷினிக்கு அவனை பிடிக்காமல் போனால் என்ன செய்வது? அவள் அவனுடைய காதலை நிராகரித்துவிட்டால் என்ன செய்வது? பல்லைக் கடித்துக் கொண்டு தன் கைவிரல்களை இறுக்க மடக்கினான். அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் எதற்காக? அவனுக்கு அவளை வெகு சொற்ப நாளாக தானே தெரியும்...? ஆனால், அவளுடன் பல வருடம் பழகியது போன்ற உணர்வு அவனுக்குள் இருந்தது. அவளுடைய களங்கமற்ற முகமும், அவனிடம் ஏதோ சொல்ல தவிக்கும் கண்களும், பயந்த சுபாவமும் அவனை அடிமையாக்கின... முக்கியமாய் அவள் கண்ணில் குடியிருக்கும் சோகம்.

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora