Part 56

1.6K 96 7
                                    

பாகம் 56

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ரிஷி, இனியவர்களின் இருப்பிடத்தில் நிறைய பேர் இருப்பதை பார்த்து அசந்து போனான். அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் நிமல். அவனுக்கு எல்லோரையும் மிகவும் பிடித்திருந்தது முக்கியமாக ஆகாஷை. அவனுக்கு வீடியோ கேம்ஸ் விளையாட தெரிந்திருந்தது தான் காரணம். அவனும் ஆகாஷும் சேர்ந்து கொண்டது, நிமலே எதிர்பாராத ஒன்று. அவர்கள் இருவரும், இனி ஒன்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் நிமலுக்கு நிம்மதியை தந்தது.

இந்த கூட்டுக்குடும்ப முறை ரிஷிக்கு புதிதாய் இருந்தது. அவனுக்கு அது மிகவும் பிடித்தும் இருந்தது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் அவனுக்கு கிடைத்ததில்லை. அவன் வீட்டில், அவனும் வர்ஷினியும் மட்டும் தான். ஆனால், வர்ஷினி எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். இது போல கேலி கிண்டல் எல்லாம் வர்ஷினிக்கு துளியும் வராது. ஆனால் இங்கோ, சிரித்து சிரித்து அவன் வயிறு புண்ணாகி போனது. ஓயாமல் சிரித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை பார்த்து சந்தோஷம் அடைந்தாள் வர்ஷினி. சொல்லப் போனால், இப்படி சிரிப்பது  அவளுக்கும் இது தான் முதல் முறை.

கட்டிலில் அமர்ந்தபடி அவள் எதையோ மிக தீவிரமாய் சிந்தித்துக் கொண்டு இருப்பதை கவனித்தான் நிமல். அவன் கூப்பிட்டது கூட அவள் காதில் விழவில்லை. அவள் அருகில் வந்து அவள் தோளில் தட்டினான்.

"அவ்வளவு சீரியஸா எதை பத்தி யோசிச்சுகிட்டு இருக்க, நான் கூப்பிட்டதை கூட கவனிக்காம...?"

"ரிஷியைப் பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"

"என்ன விஷயம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றபடி அவள் அருகில் அமர்ந்தான்.

"அவன் இங்க ரொம்ப சந்தோஷமா என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கான்..."

"ஆமா... அதனால?"

"இங்கிருந்து திரும்பிப் போகும் போது அவன் ரொம்ப வருத்தப்படுவான்"

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Where stories live. Discover now