பாகம் 60
குமணன் மற்றும் கல்பனாவின் இறுதிச்சடங்குகள் முடிந்தது. அனைவரும் ரிஷியுடன் குமணன் இல்லத்திலேயே தங்கினார்கள். இறுதி சடங்கு முடிந்த உடனேயே வீட்டை பூட்டி போட கூடாது என்பதால் ரிஷியுடன் இருக்க நினைத்தான் நிமல். அந்த வீடு, ரிஷிக்கு சொந்தமானது என்பதால் அதை பராமரிக்க லட்சுமியையும் ராமுவையும் நியமித்தான்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்லும் முன், குமணனின் சொத்துக்களையும், பொறுப்புகளையும் வர்ஷினியிடம் ஒப்படைக்க வந்தார் குணசேகரன்.
"ரிஷி மைனர் அப்படிங்கிறதால, எல்லா பொறுப்புகளையும் நீ தாம்மா டேக் ஓவர் பண்ணணும்" என்றார் வர்ஷினியிடம்.
"அம்மா ரூம்லயிருந்து எனக்கு ஒன்னு கிடைச்சிருக்கு அங்கிள்" என்றாள் வர்ஷினி.
"என்னது மா?"
குமணன் கையெழுத்துடன் இருந்த முத்திரைத் தாள்களை குணசேகரனிடம் கொடுத்தாள் வர்ஷினி. தன் கண்களை சுழற்றினான் நிமல்.
"பிளாங்க் பேப்பர்ஸா...? அதுவும் குமணன் கையெழுத்தோடவா...?" தன் கண்களையே நம்ப முடியவில்லை குணசேகரனால். அதே நம்பமுடியாத பார்வையுடன் வர்ஷினியை பார்த்தார்.
"ஆனா, அவர் எதுக்காக, ஸ்டாம்ப் பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டு வைக்கணும்?"
"எனக்கும் ஒன்னும் புரியலை அங்கிள். அவங்களோட சொந்த தேவைக்காக, அம்மா அவர்கிட்ட கையெழுத்து வாங்கியிருக்கலாம்னு நினைக்கிறேன்"
அமைதியானார் குணசேகரன். அவருக்கு கல்பனாவை பற்றி நன்றாகவே தெரியும்.
"இப்போ நான் என்ன செய்யணும்?" என்றார் குணசேகரன்.
வர்ஷினி எதுவும் கூறுவதற்கு முன்,
"எல்லா சொத்தையும் மாமா பேர்ல எழுதிடுங்க" என்றான் ரிஷி.
அங்கிருந்த அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள் என்று கூறத் தேவையில்லை.
"மாமாவோட பேர்லயா? எதுக்கு?" என்றார் குணசேகரன்.
"ஏன்னா, எல்லா சொத்தும் எங்க மாமாவுடையது தான். எங்க அப்பா, அவங்க அப்பாகிட்டயிருந்து எல்லாத்தையும் திருடிக்கிட்டாரு. அவங்களையும் கொன்னுட்டாரு"