பாகம் 63
ஹோட்டல் ப்ளூ முனை வந்தடைந்தார் குணசேகரன். அப்போது அவருக்கு சுபாவிடமிருந்து அழைப்பு வந்தது. காரில் அமர்ந்தபடியே புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்றார் குணசேகரன்.
"சொல்லுடா செல்லம்"
"அப்பா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்"
"என்ன விஷயம் டா?"
"நான் உங்ககிட்ட கேட்கலாம் இல்ல?"
"நீ என்கிட்ட என்ன வேணா கேட்கலாம்"
"நம்ம வீட்டுக்கு நிமலை டின்னருக்கு கூப்பிடலாமா?"
"கூப்பிட்டா போச்சு"
"தேங்க்யூ சோ மச் பா"
"எப்ப கூப்பிடணும்?"
"நாளைக்கு"
"சரி. நான் நிமல், வர்ஷினிகிட்ட பேசிட்டு சொல்றேன்"
"இல்லப்பா, வர்ஷினி வேண்டாம். நிமலை மட்டும் கூப்பிடுங்க"
"ஆனா, அது நல்லா இருக்காதே மா. வர்ஷினி, நிமலோட வைஃப் மட்டும் இல்ல... குமணனுடைய டாட்டரும் கூட..."
"நம்ம வர்ஷினியை இன்னொரு நாள் கூப்பிடலாம் பா. நிமலை ஸ்பெஷலா கவனிக்கணும்னு நான் நினைக்கிறேன்"
"சரி நான் நிமலை கூப்பிடுறேன். ஆனா, அவனை கவனிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு"
"நிச்சயம் பா... நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், நம்மளை எதுக்காவது அவனால மறுக்க முடியுமா என்ன?"
"சரிம்மா. இப்போ நீ எங்க இருக்க?"
"கோவிலுக்கு வந்தேன் பா"
"என்னம்மா நீ... எப்ப பாத்தாலும் கோவில் தானா? மத்த பொண்ணுங்களை பாத்து வாழ்க்கையை எப்படி சந்தோஷமா அனுபவிக்கிறதுன்னு கத்துக்கோ"
"பக்தி மார்க்கத்தில் இல்லாத சந்தோஷமா பா?"
"உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு"
"நான், உங்க பொண்ணு பா"
"சரிமா. நான் அப்புறமா பேசறேன் எனக்கு முக்கியமான ஒரு கால் வருது"