Part 4

2.2K 101 7
                                    

பாகம் 4

வரவேற்பறையில் அமர்ந்திருந்த விஸ்வநாதன், பார்வதியுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய நிமலைப் பார்த்து சிரித்தார். நிமலுக்கு கடவுள் நம்பிக்கைக் கிடையாது. ஆனால், பார்வதி கோவிலுக்கு அழைத்தால் அவன் எப்பொழுதும் மறுத்ததும் கிடையாது.

"வழக்கம் போல கோவிலுக்கு போயிட்டு வரிங்களா?" என்றார் விஸ்வநாதன்.

"ஆமாம்பா" என்றான் பெருமூச்சுடன் நிமல்.

"நீங்க எப்ப வந்தீங்க? காஃபி சாப்டீங்களா?" என்றார் பார்வதி.

"சாப்பிட்டேன். கோபால் கொடுத்தான். பார்வதி, நீ எதுக்காக நிமிலை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போய் டார்சர் பண்ற? பாவம் அவன். அவனை விட்டுட்டு மா..." என்ற அவரைப் பார்த்து முறைத்தார் பார்வதி.

"அப்பா... இப்ப நீங்க தாம்பா எனக்கு கடவுளா தெரியிறீங்க" என்றான் நிமல் சிரித்தபடி. 

சிரித்தபடி அவனுடன் ஹை-ஃபை தட்டிக் கொண்டார் விஸ்வநாதன். அதைப் பார்த்து பார்வதிக்கு வர்ஷினியின் ஞாபகம் வந்தது.

*உங்களை மாதிரி ஒரு அம்மா, என்னை மாதிரி ஒரு பொண்ணோட ஹை-ஃபை தட்டுவாங்கன்னு எனக்கு தெரியாது* என்று அவள்  கூறியதை நினைத்த பார்த்தார். அவர் முகம் மாறியது. அவர் ஏதோ யோசித்துக் கொண்டிருந்ததை கவனித்தான் நிமல்.
 
"அம்மா, நாங்க சும்மா விளையாட்டுக்கு சொன்னோம். அதுக்காக நீங்க ஃபீல் பண்ணாதீங்க"

இல்லை என்று வேகமாய் தலையசைத்தார் பார்வதி.

"நான் என்ஜிஎஃப்ஐ பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கேன்."

"என்ஜிஎஃபா...? அப்படின்னா?" என்றார் விஸ்வநாதன்.

"நிமிலுடைய ஜூனியர்... வர்ஷினி"

"அவளைப் பத்தி நினைக்க என்னமா இருக்கு?" என்றான் ஆர்வமாக நிமல்.

"எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுதுன்னு எனக்குத் தெரியல. அந்த பொண்ணு ஏதோ சோகத்துல இருக்கிற மாதிரியே தெரியுது. அவ கண்ணுல ஏதோ ஒரு ஏக்கம் தெரியுது"

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora