Part 43

1.5K 100 13
                                    

பாகம் 43

சுதாவும், வர்ஷினியும் சந்தோஷமாய் ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

"நீ சூப்பரா இருக்கே" என்றாள் வர்ஷினி.

"உன்னை விட ஒன்னும் நான் சூப்பரா இல்ல" என்றாள் சுதா.

அப்பொழுது, வர்ஷினியின் கண்கள் அங்கிருந்த புத்தக அலமாரியின் மீது விழுந்தது... முக்கியமாய், அவளுக்கு பிறந்தநாள் பரிசாக சுதா அளித்த  சமையல்கலை புத்தகத்தின் மீது. அதை எடுத்துக் கொண்டாள் வர்ஷினி.

"என்னுடைய சொத்து எனக்கு கிடைச்சிடுச்சி..." என்று உண்மை அறியாமல், உண்மையை கூறினாள்.

"நீயே வச்சுக்கோ, தாயே" என்றாள் சுதா.

அதை தன் கைப்பையில் திணித்துக் கொண்டாள் வர்ஷினி. அப்பொழுது சுதாவின் அறைக்குள் பதட்டத்துடன் பிரவேசித்தாள் அனு.

"என்ன ஆச்சு, அனு?" என்றாள் வர்ஷினி.

"சுதாவோட பெரியம்மா, ரொம்ப சீரியஸா இருக்காங்க. மூச்சுவிடவே திணறுறாங்க..."

சுதாவும், வர்ஷினியும் பெரியம்மாவின் அறையை நோக்கி ஓடினார்கள். அங்கு ஏற்கனவே அனைவரும் குழுமியிருந்தார்கள். அவரது கட்டிலை நெருங்கி அவர் கையை பற்றிக்கொண்டாள் சுதா.

"பெரியம்மா..." என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவர் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால், அவர் வாயிலிருந்து வார்த்தை வெளியேற மறுத்தது. அப்பொழுது அந்த அறைக்குள் நுழைந்தார் மருத்துவர்.

"நீங்க எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியில இருங்க" என்றார்.

சுதாவையும், அவளுடைய அம்மா கங்காவையும் தவிர, மற்ற அனைவரும் அந்த அறையிலிருந்து வெளியேறினார்கள். அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர், அவர்களை வெளியே வருமாறு சைகை செய்தார்.

சுதாவும், கங்காவும் டாக்டருடன் வெளியே வருவதை பார்த்து அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"இது மைல்ட் அட்டாக் தான். அதிகப்படியான சந்தோஷத்தால ஏற்பட்டிருக்கு. அவங்க ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்கிறதால என்னால எதுவும் நிச்சயமா சொல்ல முடியல"

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Where stories live. Discover now