Part 54

1.6K 102 11
                                    

பாகம் 54

நிமிலை சமாளிக்க படாதபாடுபட்டாள் வர்ஷினி. அவர்கள் ஒன்றிணைந்த பின், அவனுக்கு தைரியம் கூடித்தான் போனது. அவன் வர்ஷினி இடமிருந்து உதை வாங்க வில்லை... ஆனால் சீக்கிரம் வாங்கி விடுவான் போல் தான் தெரிகிறது.

அவனுடைய காயத்திற்கு மருந்து இடுவதற்காக அவன் முன் அமர்ந்தாள் வர்ஷினி. அவளைப் பார்த்து விஷமமாக புன்னகைத்தான் நிமல். பழைய பேண்ட்-எய்டை எடுத்துவிட்டு, ஆன்ட்டிபயாட்டிக் கொண்டு காயத்தை மெல்ல துடைத்தாள்.

வேண்டுமென்றே

"இஸ்ஸ்..." என்றான் நிமல்.  அவள் திடுக்கிட்டு போனாள்.

அதைப் பார்த்து அவன் சிரிக்க, அவன் தோளில் ஒரு அடி போட்டாள்.

"எவ்வளவு வலிக்குது தெரியுமா?" என்றான் கிண்டலாக.

"பொய் சொல்லாதீங்க... நல்லாவே ஆறி இருக்கு" என்றாள் வர்ஷினி.

"அப்படியா சொல்ற?"

"ஆமாம்..."

"எல்லாம் நீ கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்டால தான்" என்று புன்னகை உதிர்த்தான்.

உதடு கடித்து வெட்கப் புன்னகை பூத்தாள் வர்ஷினி.

"நீ நெனச்சா என்னை இன்னும் கூட ஃபிட் ஆக்கலாம்..." என்று மெல்ல நூல் விட்டுப் பார்த்தான்.

"வாயை மூடுங்க"

"நீ நெனச்சா, அதையும் செய்யலாம்"

ஒன்றும் கூறாமல் அவன் காயத்துக்கு மருந்திட்டாள்.

"ஏதாவது சொல்லு..."

"ஸ்டே அவே..."

"எதுக்கு நான் தூரமா இருக்கணும்...?"

"சீரியஸ்னெஸ்ஸை புரிஞ்சுக்கோங்க, நிமல், ப்ளீஸ்"

"ஏன்? என்ன பிரச்சனை? பாரு நான் எவ்வளவு ஃபிட்டா இருக்கேன்..."

"ஆமாம், ஆமாம்..."

அவள் அங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் அறைக்குள் வரவேயில்லை.

சிறிது நேரம் கழித்து

இன்டர்காம் அலறியது. குழப்பத்துடன் அதை எடுத்து பேசினான் நிமல்.

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Where stories live. Discover now