Part 33

1.5K 93 8
                                    

பாகம் 33

தன் முன் நின்ற ராஜராஜனை பார்த்த சொக்கலிங்கத்தின் முகம் வெளிறிப் போனது. இருதய நோயாளியான தனது நண்பன், விதவிதமான அசைவ உணவுகளை வெளுத்து கட்டி கொண்டு இருப்பதை பார்த்த ராஜராஜன் கையை கட்டிக் கொண்டு நின்றார். இருதய நோயாளிகள் இப்படி தான் உணவை உண்பார்களா? தன் நண்பனின் கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டார் சொக்கலிங்கம்.

"ஹார்ட் அட்டாக் வந்தவங்க இப்படிப்பட்ட சாப்பாடு சாப்பிடுவாங்கன்னு இது வரைக்கும் எனக்கு தெரியாது" என்றார்.

சொக்கலிங்கம் அமைதி காத்தார்.

"உனக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டா?"

"நிச்சயமா இல்ல ராஜு... ஒரு பெட்டுக்காக தான் பண்ணேன்"

"பெட்டா?" என்று முகம் சுருக்கினார் ராஜராஜன்.

"ஆமாம்... உனக்கு என்னை வந்துப் பார்க்க நேரமே கிடைக்கிறதில்ல. அது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அது ராஜேந்திரனுக்கு தெரியும். நான் எப்பெல்லாம் 'உங்க அப்பா என்னை மறந்துட்டான்னு' சொல்றேன்னோ, அப்பெல்லாம், 'அவர் மனசுல உங்களுக்குன்னு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கு. தேவைப்பட்டா, அவர் எல்லா வேலையையும் விட்டுட்டு நிச்சயம் உங்களை பார்க்க வருவார்ன்னு' அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பான்.  நான் சாகறதுக்கு முன்னாடி அப்படி நடக்குதான்னு பார்க்க நெனச்சேன். நீ கண்டிப்பா வருவேன்னு ராஜேந்திரன் பெட்டு கட்டினான். நீ என்னை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்தப்போ, நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா?"

"ஆனா, எதுக்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆன?"

"அப்ப தான் நீ நம்புவேன்னு ராஜேந்திரன் தான் அட்மிட் ஆக சொன்னான்"

"ஆனா, நீ தான் பெட்டுல தோத்துட்டியே..."

"தோத்துக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்... எனக்காக நீ இருக்கல்ல..." என்று புன்னகைத்தார் சொக்கலிங்கம்.

ஆக, அவர் எதிர்பார்த்தது போல, இந்த மனிதனை அவருக்கே தெரியாமல் ராஜா பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Where stories live. Discover now