Part 59

1.6K 94 13
                                    

பாகம் 59

அந்த பங்களாவில் எப்படி தீ விபத்து நிகழ்ந்தது என்பது புரியவில்லை நிமலுக்கு. அவனுக்கு நிச்சயமாக தெரியும், அங்கு மின்சாரம் தூண்டிக்கப்பட்டு இருந்தது என்பது. அவன் உடனடியாக ராஜாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான். அவனைத் தவிர, ராஜாவுக்கு தானே அனைத்தும் தெரியும்...! ராஜாவை சந்திக்க செல்ல தயாரானான் நிமல். கீழ்தளம் வந்த போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த செய்தியை பார்த்து ஸ்தம்பித்து நின்றான். அவன் மட்டுமல்ல, அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள்

அந்த பங்களாவுக்கு தீ வைத்ததற்காக,  நிமேஷை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். அவன் கோயம்புத்தூரிலிருக்கும் விஸ்வநாதனின் தம்பி மகன் என்பதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆம், நிமலையும் வர்ஷினியையும் பிரிப்பதற்காக, குமணனிடம் இரண்டு கோடிக்கு வியாபாரம் பேசிய அதே நிமேஷ் தான். ஒருவருக்கு ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். இந்த விஷயத்தில் நிமேஷ் எங்கிருந்து வந்தான்?

"என்னடா இது?" என்றார் பார்வதி அதிர்ச்சியுடன்.

தொலைக்காட்சித் திரையை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். அதன் பிறகு அங்கு நிற்க முடியவில்லை நிமலால். அவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

ராஜராஜன் மனை

நிமலை பார்த்தவுடன் வழக்கமான புன்னகையுடன் அவனை வரவேற்றான் ராஜா. அவன் வெகு இயல்பாய் இருந்ததைப் பார்த்து குழம்பினான் நிமல். ராஜாவுக்கு இன்னும் விஷயம் தெரியாதா?

"நீ நியூஸ் பாக்கலயா?" என்றான்.

"பார்த்தேன். போலீஸ், நிமேஷை அரெஸ்ட் பண்ணிட்டாங்க" என்றான் ராஜா.

"ஆனா ஏன்? எதுக்காக போலீஸ் அவனை அரெஸ்ட் பண்ணாங்க? அவன் ஒரு இன்னசென்ட்..."

"யாரு இன்னசென்ட்? நிமேஷா? அவன் என்ன செஞ்சான்னு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட..."

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Where stories live. Discover now