Part 50

1.7K 98 10
                                    

பாகம் 50

அரை மணி நேரமாக ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தான் நிமல். அந்த அழைப்பு காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்தது. தாட்சாயணி, பிரகாஷ், சுதா, அனு, ஆகாஷ் என மாறி மாறி அவனை நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் அதே கதையை கூறி வெறுத்துப் போனான் நிமல்.

"இது எப்படி நடந்தது, நிம்மு?" என்று கவலையாய் கேட்டான் ஆகாஷ் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து.

வெறுப்புடன்  தன் கண்களை சுழற்றினான் நிமல். அவனிடமிருந்து ஃபோனை வாங்கி, அவனை நிம்மதிப் பெருமூச்சு விட செய்தாள் வர்ஷினி.

"ஹலோ.... "

"வர்ஷினினினி... எப்படி இருக்கீங்க?"

"நாங்க நல்லா இருக்கோம், அக்கி..."

"நாங்க அடுத்த வாரம் சென்னைக்கு வர போறோம்"

"அம்மா சொன்னாங்க "

"உங்களை பார்க்க நாங்க ரொம்ப ஆவலா இருக்கோம்"

"நாங்களும் உங்களை பார்க்க ஆவலா தான் இருக்கோம்" என்றாள் நிமலை பார்த்தபடி. அவனுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

"நீங்க ரொம்ப ஸ்வீட்... நாங்க ஏகப்பட்ட பிளான்ஸ் வச்சிருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க... நிமலுக்கு போரடிக்காம நாங்க பாத்துக்குறோம். அவன் கூடவே இருந்து அவனை சந்தோஷப்படுத்த போறோம்"

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

"ஓ, அப்படியா? எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். எப்படி தான், நிமல் வீட்ல ஒரே இடத்திலிருந்து டைம் பாஸ் பண்ணப் போறாறான்னு... நீங்க தான் நிறைய பிளான்ஸோட அவரை சந்தோஷப்படுத்த வரிங்களே... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

அவள் பேசுவதைக் கேட்டு வாயைப் பிளந்தான் நிமல். அவள் கையில் இருந்து ஃபோனை பிடுங்க முயற்சித்தான். ஓரடி பின்னால் நகர்ந்து, அவனை அப்படி செய்ய விடாமல் தடுத்தாள் வர்ஷினி.

"இருங்க வர்ஷினி. உங்ககிட்ட சுதா அண்ணி பேசணுமாம்"

அவன் ஃபோனை சுதாவிடம் கொடுத்தான்.

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Where stories live. Discover now