ராமநயனம்

693 10 3
                                    

ராமநயனம்

அத்தனை அழகிய தன் கண்களுக்கு அழகாய் மையிட்டுக்கொண்டிருந்தாள் சீதா

" எவ்வளவு அழகான கண் அக்கா உனக்கு பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு" என்றவாறு சொக்கி நின்றாள் தங்கை ஸ்ருதி

சிறு நகையோடு தங்கையை நோக்கினாள் சீதா

"ஆனால் என்ன பண்றது, எந்த பையனாலயும் உன் கண்ண பார்க்க முடியாதே.  அப்படி மட்டும் பாக்க முடிஞ்சுருந்தா உன் கண்ணால நம்ம ஊர்ல பல கவிஞர்கள் உருவாயிருப்பாங்க"  என்று கிண்டலாடித்தவாறு சிரித்தாள் ஸ்ருதி

"என்னால பாக்க முடியுமே, என் மகளோட கண்ண வச்சு நான் கவித எழுதி கொடுக்குறேன்" என்றவாறு உள்ளே வந்தார் ராஜன், சீதாவின் தந்தை

"அப்பா நீங்க எழுதுற கவித எல்லாம், எல்லா அப்பாவலையும் தன் மகளுக்கு எழுத முடியும், நான் சொல்றது உங்களுக்கு புரியாது" என்று சலித்துக்கொண்டாள் ஸ்ருதி

"ஆமா அப்பா, வயசானவங்கள்ல இருந்து சின்ன பசங்க வர, எந்த பையன் அக்காவோட கண்ண பாத்தாலும் மயங்கி கீழ விழுந்துடுறாங்க, நீங்க மட்டும் அக்கா கண்ண நேருக்கு நேர் பாக்க முடியுதே அதெப்படி" சந்தேகத்தோடு கேட்டாள் ஸ்ருதி

"ஏன்னா நான் உங்களோட அப்பா" என்றவாறு சற்று கறராக கூறினார் ராஜன்

"அப்பா இன்னைக்கு நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகும், மலைகாளி கோவிலுன்னு ஒரு பழமையான கோவில் ஒன்னு இருக்கு, இன்னைக்கு காலேஜில இருந்து அங்க போறோம், ரிசெர்ச்சுக்கு " என்று தந்தையிடம் கூறினாள் சீதா

சீதா தொல்லியல் துறையில் தனது பட்டப்படிப்பை பயின்று வருகிறாள்,அவளுக்கு அதில் பேரார்வம்

"சரிம்மா பத்திரமா போய்ட்டுவா "என்றவாறு சீதாவின் தலையில் வருடினார் ராஜன்

"லென்ச போட்டுட்டு போக்கா, இல்லன்னா டிரைவர் மயங்கி விழுந்திடுவார் "என்று மீண்டும் சீதாவை கேலி செய்து சிரித்தாள் ஸ்ருதி

ராமநயனம் Where stories live. Discover now