Episode 45

74 4 2
                                    

அனைத்து படைதளபதிகளும்.....படைவீரர்களும் அரண்மனை மைதானத்தில்  கூடியிருந்தனர்‌‌.....முதன்மை தளபதிகளோடு,முன்னின்று முழக்கமிட்டு கொண்டிருந்தாள் நயனா"நட்பு தேசங்களின் உதவியை பெறுவதற்கு,போதிய சமயம் நம்மிடம் இல்லை....எனினும் நட்பு தேசங்களின் உதவியை பெறுவதற்காக ஓலை அனுப்பப்பட்டுள்ளது.......அவர்களது உதவி தக்க சமயத்தில் நமக்கு கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும்....பொழுது புலர்ந்தவுடன் நாம் போர்களம் புறப்பட வேண்டும்......எதிரிகளை மண்ணில் சாய்த்து,நமது மண்ணின் வீரத்தை பறைசாற்ற வேண்டும்........எல்லாம் வல்ல ஈசன் நமக்கு துணை நிற்பார்......இனிமேல் ருத்ர தேசத்தின் மீது போர்தொடுக்கும் யோசனையும் எவருக்கும் எழக்கூடாது......."சிங்கமாய் நயனா கர்ஜிக்க🗡️.....🔥அந்த இடமே ஒரு நொடி நிசப்தமானது

"சிம்மபுரி அரசனின் தலை.....இம்மண்ணில் உருளும் மகாராணி.....உருளசெய்வோம்......"படைவீரர்களுள் ஒருவனாய் நின்றிருந்த நந்துவின் முழக்கம் இது

அந்த குரல் அங்கிருந்த அனைத்து வீரர்கள் மனதையும் கர்ஜிக்க செய்தது

பூரிப்போடே பெருமைகொண்ட நயனாவும்....."ஹர ஹர மகாதேவா....."என போர்முழக்கமிட

வீரர்களின் முழக்கமும் விண்ணை தொட்டது....."ஹர ஹர மகாதேவா🔥......"

இந்த முழக்கம் மீராவின் காதுகளை எட்டியபோது......எச்சில் முழுங்கி பதறி நின்றாள்😟......

பதட்டம் தணியாமல் ரகுபதியும் மாதவனும் வீரர்களோடு காடுகளை தாண்டி ருத்ர தேசம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.......🐴🐴🐴

பொழுதும் புலரதொடங்கியது ஈசனை வணங்கி உருகினாள் மீரா........

போருக்கு புறப்பட  அனைவரும் தயாராக நின்றிருந்தனர்......அனைத்து வீரர்களுக்கும் வீரத்திலகம் இடப்பட்டது.......நயனாவுக்கு திலகமிட கலங்கிய வழிகளோடு மெல்ல அடிவைத்து வந்தாள் மீரா.....

வலைமூடிய கண்களோடு....கவசம் பூட்டி,கையில் வாளோடு கம்பீரமாய் நின்றிருந்தாள் நயனா........

ராமநயனம் Where stories live. Discover now