வகுப்பறையில் இருந்தும் பாடத்தை கவனிக்காமல்,சனி ஞாயிறு எப்போது வரும் என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தாள் சீதா.......உதயாவோ,திருட்டுத்தனமாய் மோகித்தை பார்த்தவண்ணம் இருந்தாள்.......மோகித்தோ,நயனாவின் தாலி,எங்கிருக்கும்,அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற யோசனையில் விறைப்பாக இருந்தான்.......எந்த கவலையும் இல்லாதவனாய்,மேசையில் கமந்து உறங்கிக் கொண்டிருந்தான் சந்துரு🤦........ஆசிரியரோ,விடாமல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்......
அச்சமயம் இடைவேளை மணி ஒலிக்கவே....."எவன்டா அது.....தூங்கிட்டு இருக்கும்போது,மணி அடிக்குறது......."தூக்கத்தில் தன்னை மறந்து கத்தினான் சந்துரு.....சற்றே பதட்டமடைந்தான் மோகித்
"யாரது?....சந்துருவா?....."ஆசிரியரின் குரலிது
சந்துருவை தட்டி எழுப்பினான் மோகித்
ஒருவழியாக கண்களை கசக்கி விழித்து பார்த்தவன்......தடுமாறியவாறே எழுந்து நின்றான்......
"சாரி சார்......."அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்
சற்றே முறைத்தவாறு அவனை மேலும் கீழும் பார்த்தார் அவர்.....இவனெல்லாம் எங்கே உயரப்போகிறான் ,என்று சலித்துக்கொண்டவாறு அவர் நகர.....அனைத்து மாணவர்களும் ஏற்க்கனவே நகர்ந்திருந்தனர்.....
அதை எதையும் கண்டுகொள்ளாமல் மோகித்தின் பக்கம் திரும்பினான் சந்துரு......அவனோ முறைத்தவாறு அமர்ந்திருந்தான்......
"ஏன்டா இப்டி இருக்க......க்ளாஸ் எடுக்கும்போது தூங்குற?......."மோகித் கேட்க....
"உனக்கென்னடா ஈசியா சொல்லிட்ட....காலைல ஆனா காலேஜு,சாய்ங்காலம் ஆனா,ஆர்ச்சரி......எனக்கு தூங்ககூட டைம் இல்ல......இவ்ளோ பேசுறியே,முதல்லயே என்ன எழுப்பி விட்ருக்கலாம் இல்ல?....."சந்துரு கேட்டான்
"நான் வேற ஒரு யோசனைல,இருந்தேன்டா....."யோசனையோடே கூறினான் மோகித்
"பாடம் நடத்தும்போது,கனவு காண்றது தப்பில்ல.....தூங்குறது மட்டும் தப்பா.....போடா டேய்....."என்றவாறு கேன்டீனை நோக்கி நகர்ந்தான் சந்துரு