Episode 57

79 6 1
                                    

"நீலனா?....என்னையா சொல்றீங்க?..."குழப்பத்தோடே கேட்டான் பரத்

"இங்க வந்தும் ஆரம்பிச்சுட்டியா?....கொஞ்சம் அமைதியா இரு சீதா....."சற்றே கடிந்தான் சந்துரு

"நீ சும்மா இருடா...."சந்துருவை பார்த்து ராஜன் கூறிவிட்டு...

"நீ வாம்மா சீதா...."சீதாவை அழைத்தார்

"உக்காருங்க......"பரத் கூற,ராஜனும் சீதாவும் அமர்ந்தனர்....சந்துருவும் உதயாவும் அருகில் நின்றுகொண்டனர்

"நான் சொன்ன...என் ஃப்ரெண்டு இவ தான்....."உதயா கூறினாள்

"எங்களோட கல்யாண ஆல்பத்துல நான் உங்கள பாத்துருக்கேன்....அது மட்டும் இல்லாம,உதயா உங்கள பத்தி நிறைய சொல்லிருக்கா,அந்த ரகுபதி நயனா கதையையும் சொன்னா.....என்ன உங்களுக்கு தெரியுதா?........"சீதாவை பார்த்து பரத் கேட்க...ஏதும் பேசாமல் அவனையே நோக்கியிருந்தாள் சீதா,.........அவனாவது முன்ஜென்ம நினைவுகளை கொண்டிருக்கமாட்டானா??? என்ற தவிப்பு அவளுக்குள் இருந்தது😣....

"சீதா.....உன்கிட்ட தான் கேக்குறாரு...."அவளை தட்டினான் சந்துரு.....சற்றே தன்னிலை உணர்ந்தவள்..."என்ன...என்ன கேட்டீங்க?...."என்று கேட்க....

"சீதா....."என்றவாறு லேசாய் முறைத்தான் சந்துரு....அதை கவனித்த பரத்..."கூல்.....கோபபடாதீங்க,சீதா கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்,...நீங்க எல்லாம் வெளில வெயிட் பண்ணுங்க....."பாரத் கூற,அனைவரும் மெல்ல வெளியேறினர்...

ஏதும் பேசாமல் சோகமாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் சீதா.......ஏனெனில்,யாரும் அவளை நம்பவில்லை,அவளை புரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை.....ஆகையால்,பரத்திடம் புரிய வைப்பதற்கான முயற்சியை கூட அவள் மேற்கொள்ளவில்லை.......

"சீதா.....நீங்க என்ன முதல் தடவ பாத்தப்போ...என்ன ஏற்கனவே பாத்தமாதிரி தோணுச்சா?...."பரத் கேட்டான்

மெல்ல தலைநிமிர்ந்தாள் சீதா...."உங்க கல்யாணத்துல உங்கள பாத்தப்போ,எங்கயோ பாத்த முகம்னு எனக்கு தோணுச்சு,....ஆனா,நம்ம வாழ்க்கைல பலரோட முகத்த பாக்கும்போது அப்படி தோணும்...அதனால,அத பத்தி நான் அப்போ யோசிக்கல......இப்போ நீங்க யாருன்னு எனக்கு தெரியுது....ஆனா,இத நான் சொன்னா யாரும் நம்பமாட்டாங்கன்னு எனக்கு தெரியும்......புரியவைக்க முயற்சி பண்ணி பண்ணி....நான் சோர்ந்து போயிட்டேன்......இதுக்கு மேல என்னால முடியாது......"தளர்ந்த குரலில் கூறினாள் சீதா

ராமநயனம் Where stories live. Discover now