உணர்ச்சிப் பெருக்கோடு சீதாவை அணைத்தபடி கதறி அழுதான் சந்துரு......
"என்னாச்சு சந்துரு....எதாச்சும் பிரச்சனையா?....."பதட்டத்தோடே சீதா கேட்டாள்....ஆனால் சந்துரு எந்த பதிலும் கூறவில்லை....
முந்தைய பிறவியில் உயிரற்ற உடலாய்,போர் காயங்களோடு செண்பக நயனாவை பார்த்த நினைவுகள் ருத்ரனின் நெஞ்சில் நீங்கா வடுவாய் இறுதிவரை அவனை வருத்தியது.....அதன் வெளிப்பாடே இந்த கதறல்...அதை அழுதே தீர்த்தான்
ராமோ ஸ்ருதியை பார்த்தான்....அவள் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் நிறைந்திருந்தது......"மாமா......"என்று அவள் அழைத்தபோதே,அவன் உணர்ந்து கொண்டான்
அதே உணர்ச்சிப்பெருக்கோடே....."பவானி......"ராம் அழைக்க,.....அதை ஆமோதித்தவாறு ஸ்ருதி தலையசைத்தாள்
அவளது தலைகோதியவனுக்கு பழைய நினைவுகள் நெஞ்சில் அலையாய் எழுந்தது.........
"ஆனா எப்டி?....எப்போ?..."ராமின் குரல்
"தெரியல....இன்னைக்கு காலைல எழும்பும்போது,நான் பவானியா இருந்தேன்.....அந்த பதட்டத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல....அப்போதான் பக்கத்துல இவரு தூங்கிட்டுருந்தாரு.......எனக்கு நிலம புரிய ஆரம்புச்சுது.....அவரு எழுப்பும் போது....அவரும் பவானிபுரி அரசரா இருந்தாரு........நயனா அக்காவ,சாரி...சீதா அக்காவ பாக்கணும்னு....அரக்கப்பரக்க வந்துட்டாரு....நானும் கூடவே வந்துட்டேன்......."ஸ்ருதி கூற....சீதாவின் கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.....ருத்ரனோடு இருந்த தருணங்கள் அவள் நெஞ்சில் இசைத்தது......அதே உணர்ச்சிப்பெருக்கோடே,அவளும் ருத்ரனை இறுக அணைத்துக் கொண்டாள்
ஒரு வழியாக சந்துரு பேசினான்....."நீ ஏன் அப்டி பண்ண?.....நீ இல்லண்ணா நான் என்ன ஆவேன்னு யோசிச்சு பாத்தியா?.....அரசர் ரகுபதி உன்னால எத்தன வேதனய அனுபவிச்சாருன்னு தெரியுமா?.....எங்க யாரையும் பத்தி யோசிக்காம,நீ எப்புடி உன் உயிரவிட துணிஞ்ச?.......சொல்லு நயனா?...."தன் வேதனையை கொட்டி தீர்த்தான்
அவனுக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது என்ற ஆனந்தத்தில் இருந்தே சீதாவால் வெளியே வர முடியவில்லை.......இருப்பினும் அவனுக்கு பதிலுரைக்க முற்பட்டாள்