குருதி பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது.......நயனாவின் விழிகளில் நீரும் பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது.....அவள் கண்ணீருக்கு காரணம்,வடியும் செந்நீர் அல்ல.....ரகுபதி குறித்த எண்ணங்கள்.....
ருத்ரனை குழந்தையாய் தன் கைகளில் ஏந்திய கணம் முதல்....முதல்முறை ரகுபதியை கண்டது ,அவன் கைபிடித்து ருத்ர தேசத்தில் அடி எடுத்து வைத்தது,என அனைத்து நிகழ்வுகளும் அவள் இதயத்தில் இசைந்தாடியது.......ரகுபதிக்கு அளித்த வாக்கும் அவள் காதுகளில் ஒலித்தது.........பரிதவித்து கதறினாள் நயனா......
தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முற்பட்டாள்.....இதுவே விதி,இதை எண்ணி பரிதவிப்பதில்,அர்த்தமில்லை......கடமையை செய்து,இறைவனின் முடிவை மனதார ஏற்பதே சிறப்பு.....என்றெண்ணியவள்.....நிலைமையின் உண்மையை ஏற்றுக்கொண்டாள்.......
விழிநீரை துடைத்தவாறே,வீறுகொண்டு எழுந்தவள்....தன் முந்தானையின் ஒரு பகுதியை கிழித்து,வயிற்றில் இறுக கட்டிக்கொண்டாள்.....வடியும் குருதியின் தாக்கம் குறைக்க.....
உறுதிகொண்ட நெஞ்சோடு....தாய் காளியை பார்த்தாள்....."தாயே....உங்கள் எண்ணப்படியே ஆகட்டும்....உங்கள் நிபந்தனைக்கு நான் கட்டுப்படுகிறேன்......."என்றவாறு வணங்கினாள் நயனா
"ஆகட்டும் மகளே....இன்னும் ஆராயிரம் பௌர்ணமிகள்....நிபந்தனைபடி உன் வாரிசை நான் பாதுகாப்பேன்......நினைவில் கொள்,உன் கணவன்,தாமதம் ஏதுமின்றி,நிபந்தனைபடி இவ்விடத்தை அடைய வேண்டும்........"எடுத்துரைத்தாள் துர்காவில் உள் நின்ற காளி
"ஆகட்டும் தாயே....இப்போது நான் என் விதியின் பாதையில் செல்லவிருக்கிறேன்.......ஒரு அரசியாக,மீண்டும் போர்க்களம் புகவிருக்கிறேன்.......உத்தரவு தாருங்கள்....."மீண்டும் வணங்கினாள்
"உனக்கே வெற்றி கிடைக்கட்டும்...."கைஉயர்த்தி,ஆசிகூறினாள் காளி....
தன் வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் நயனா.......
வெளியே காத்திருந்த வீரர்கள்....குருதியில் நனைந்து நயனா வருவதை பார்த்து திகைத்து நின்றனர்.....ஆனால் அவள் வீறுகொண்ட நடையில் குறைவில்லை🔥