கல்லூரி மரத்தடி நிழலில் மோகித் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்....சந்துரு வழக்கம்போல் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.....அச்சமயம் பேராசிரியர் துருவன் சற்று தொலைவில் கடந்துசென்றார்.......அதை பார்த்த சந்துருவின் மனதில் ஒரு கேள்வி.....
'டேய் மோகித்...."
"என்ன?....சொல்லு...."மோகித்தின் குரலிது
"போன ஜென்மத்துல வில்லனா இருந்தவரும்,இப்போ நல்லவரு ஆயிட்டாரு.....அப்போ,இந்த ஜென்மத்துல வில்லனே இல்லையா?...."சந்துரு கேட்க....முறைத்தவாறு அவனை பார்த்தான் மோகித்....
"இருக்குற பிரச்சன போதாதுன்னு......வில்லன் இல்லன்னு கவலபடுறியா?..."கடுப்பாக மோகித் கேட்க...
"அதுக்கில்லடா.....வில்லன் இல்லன்னா,சுவாரஸ்யமாவே இருக்காதே அதான் கேட்டேன்....."சந்துரு பேசிக்கொண்டிருக்கும்போதே,மோகித்தின் அலைபேசி ஒலித்தது.....அதை எடுத்து பார்த்தவன்....
"வில்லன் இல்லன்னு யார் சொன்னது?.....இதோ இருக்கானே...."என்றவாறு அலைபேசியை உயர்த்திக் காட்டினான் மோகித்......அது ராம்.....
திருதிருவென முழித்தான் சந்துரு....மோகித் அலைபேசியை எடுத்து பேச தொடங்கினான்......அச்சமயம் உதயா அங்கு வந்தாள்.....
மோகித்தும் பேசி முடித்து அலைபேசியை அணைத்தான்.....உதயாவை பார்த்து புன்னகைத்தான்
"நாம இன்னைக்கு நயனாவ போய் பாத்துட்டு வருவோமா?...."தயங்கியவாறே கேட்டாள் உதயா
"இனைக்கா......போன வாரம்தானே போனோம்......"மோகித் கேட்டான்
"எனக்கு அவள பாத்துட்டே இருக்கணும்னு தோணுது....."உதயாவின் குரல்
"என்ன உதயா பேசுற.....அவ இப்போ ராமோட பொண்ணு.....சும்மா சும்மா அவள் ஸ்கூல்ல போய் பாத்தா நல்லாருக்காது.......சொன்னா புரிஞ்சுக்க....."மோகித் கூற....முகம் வாடி தலைகுனிந்தாள் உதயா....
அவளுக்கு எப்படி கூறி புரியவைப்பது என்று சற்றே மோகித் தடுமாற......நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதாய் சைகையித்தான் சந்துரு....