உடைந்த மனதோடு மோகித் செல்வதை உதயா கவனித்தாள்......அவள் மனம் மேலும் பதட்டம் கொண்டது.........பரத்தின் அறையை நோக்கி சென்றாள்.....
பரத் கலங்கி நின்று கொண்டிருந்தான்........
"மாமா....."உதயாவின் குரல் கேட்டு அத்திசை நோக்கினான் பரத்
"மோகித்கிட்ட என்ன சொன்னீங்க....அவரு ரொம்ப சோகமா போறாரு...."பதட்டத்தோடே கேட்டாள் உதயா
பரத் எதுவும் பேசவில்லை.....தலைகுனிந்து நின்றான்
"எதுவா இருந்தாலும் சொல்லுங்க மாமா......நீங்க அமைதியா இருக்குறத பாத்தா,எனக்கு ரொம்ப பயமா இருக்கு....."தவித்துப் போயிருந்தாள் உதயா
"ராம்.....ராம்....கொஞ்சம் சீரியஸா இருக்காரு...."பக்குவமாகவே பேசினான் பரத்
உதயாவின் கண்கள் கலங்கி போயின....."எனக்கு புரியல.....ப்ளெட் வந்த உடன,அவருக்கு எல்லாம் சரியாயிடும் தானே?.....சொல்லுங்க மாமா......"உதயா பேச பேச,பரத் பொறுமை இழந்தான்
"ராம் பொழைக்குறது ரொம்ப கஷ்டம் உதயா......சந்துருவுக்கு ஜஸ்ட் ப்ளெட் லாஸ் தான்.....ஆனா,ராமுக்கு தலைல பலத்த அடி.......இவ்ளோ நேரம் அவரு உயிரோட இருக்குறதே ஆச்சரியமா இருக்கு.......போக துடிக்குற அவரோட உயிர,போகவிடாம......அவரு புடிச்சு இழுத்து வச்சுருக்காரு.......எங்களால முடிஞ்சத நாங்க செஞ்சுட்டு இருக்கோம்.......சீதாவ,எல்லாத்துக்கும் ரெடியா இருக்க சொல்லு......"பரத் பேச பேச,உதயாவின் நம்பிக்கை ஆட்டம் காணத் துவங்கியது....
குனிந்த தலையோடு அங்கிருந்து வேகமாக நகர முற்பட்டவன் சற்றே தாமதித்தான்.......
"கடவுள்னு ஒருத்தர் இருந்தா.....அவரு நெனச்சா.....எப்டி பட்ட அதிசயம் வேணும்னாலும் நடக்கும்.....நம்பிக்கையோட காத்திருப்போம்......"கூறிவிட்டு பரத் நகர்ந்தான்
உதயாவோ செய்வதறியாது நின்றிருந்தாள்.....
உடைந்த மனதோடு......கால்போன பாதையில் நடந்து கொண்டிருந்தான் மோகித்......
"அண்ணா......."குரல் கேட்ட திசையில் நோக்கினான் மோகித்
அது சுலோச்சனா......மோகித்தின் தங்கை.....ஜீன்ஸ் டீ ஷர்ட்டில்....பதட்டத்தோடு வந்தாள்