Episode 117

101 4 4
                                    

விமான நிலையத்துக்குள் அரக்கப்பரக்க நுழைந்து ஓடினான் சந்துரு.......

ஒருவழியாக காத்திருக்கும் இடத்தை அடைந்தவன்....கைகடிகாரத்தை பார்த்தவாறே,உள்ளிருந்து வருகிறவர்களை பார்த்துக்கொண்டிருந்தான்......அவன் ராம் சீதாவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்......

முதலில் அவன் கண்ணில்பட்டது நயனா தான்......மூன்று வருடம் தான் என்றாலும்,அவள் உருவத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது,....பருவமடையும் வயதல்லவா.....குதிரைவால் ஜடையோடு ,ஜீன்சும் டீ சட்டையும் அணிந்திருந்தாள்.......அழகாய் இருந்தாள்......அவள் கையில் இரட்டையரில் ஒருவன் இருந்தான்.......

"ஹாய்.....டார்லிங்......"சந்துருவின் குரல் கேட்டு அத்திசை பார்த்தவள் முகத்தில் ஒரே ஆனந்தம்

"சித்தப்பா........"என்றவாறு அவனருகே வேகமாக வந்தவளை,நெஞ்சோடு மெல்ல அணைத்தவன்,குழந்தையை வாங்கிக்கொண்டான்......

"எப்டி இருக்க செல்லம்....."சந்துரு கேட்டான்

"சூப்பரா இருக்கேன்.....சித்தி எப்டி இருக்காங்க?...."நயனா கேட்டாள்

"உன் சித்தி தானே,சூப்பரா இருக்கா....உன் டாடி மம்மி எங்க?....குசன் எங்க?...."சந்துருவின் குரல்

"லக்கேஜ் எடுத்துட்டு வருவாங்க.....இதோ வந்துட்டாங்க....."நயனா கூற,அத்திசை பார்த்தான் சந்துரு

சீதா குசனை  வைத்திருந்தாள்,பெட்டிகளை தள்ளியவாறு ராம் அவர்களோடு வந்தான்.........

"இவன கொஞ்சம் வச்சுக்கோ...."என்றவாறு லவனை நயனாவிடம் தந்தவன்,....சீதாவை நோக்கி வேகமாக ஓடினான்...அவளை இறுக அணைத்தவன்.....

"எப்டி இருக்க?.......உன்ன இவ்ளோ நாள் நான் பிரிஞ்சதே இல்ல....."சந்துரு சற்று உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.....சீதாவும் தான்....தலையை ஆட்டியவள்,

"நீ எப்டி இருக்க?..."

"நீங்கெல்லாம் வந்துட்டீங்கல்ல.....இனி நான் சூப்பரா இருப்பேன்....."என்றவன் ராமை கவனித்தான்,....."குருவே....சாரி....அண்ணா....நீங்க எப்ப வந்தீங்க?....."சந்துரு கேட்க....

ராமநயனம் Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin