ருத்ர தேசத்தின் மரங்களில் துளிர்த்த இலைகள்☘️ எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்....சில நேரங்களில் மழைதுளியால், சில நேரங்களில் பனித்துளியால்....அத்தனை பசுமையான தேசம்.......கனிகளும் ,பூக்களும் பூரண வளமாய் மரங்களிலும்,செடிகளிலும் நிறைந்திருப்பதை பார்க்கையில் ,இதுதான் சொர்க்கபுரியோ?.....என்று தோன்றும்.......அந்நாட்டு மக்களின் மனங்களே சொர்க்கத்தின் வாயில்
ஆள்பவன் உத்தமன் என்றால்,ஆட்சிக்குட்படும் மக்களும் உத்தமநிலையை அடைவார்கள் என்பதற்கு சாட்சி அரசன் ரகுபதி சந்திரா.....ஆதவன்போல் பிரகாசமானவன்.......
அன்றைய காலைப்பொழுதில் ஆதவனின் திசையை நோக்கி,நமசிவாய நாமம் சொல்லியவாறே,கண்கள் மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தான் ரகுபதி
"ரகுபதி.......,உனக்கு சுந்தர நாகபுரியிலிருந்து ஓலை வந்துள்ளது"என்றவாறு அங்கு வந்தான் மாதவன்.......ரகுபதியின் உயிர்த்தோழன் .......ருத்ர தேசத்தின் சேனாதிபதி
அமைதியோடே கண்விழித்து அவனை பார்த்தான் ரகுபதி"ஓலையில் உள்ள செய்தி என்ன?......"
"சுயம்வரத்திற்கான அழைப்பு வந்திருக்கிறது"என்று மாதவன் கூறியபோது ,சலிப்போடே மெல்ல எழுந்து நின்றான் ரகுபதி
சற்று கோபத்தோடே அவனருகில் சென்றான் மாதவன்"ரகுபதி.....,இதுவரை வந்த அனைத்து சுயம்வர அழைப்புகளையும் நீ நிராகரித்துவிட்டாய்,நானும் உன்னை கட்டாயப்படுத்தவில்லை.....ஆனால் இனிமேலும் என்னால் அமைதியாய் இருக்க முடியாது......சுயம்வரத்திற்கு நீ செல்லத்தான் வேண்டும்" கோபமாய் உரைத்தான் மாதவன்