இரவு பூஜையும் தொடங்கியது.....எங்கும் சிவநாமம் ஒலிக்க,பக்தர் கூட்டத்தின் ஆரவாரம் விண்ணை பிளந்து,...வான்மழை கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தது.......பக்தி பரவசத்தில் அனைவரும் திழைத்திருந்தனர்.....ஆகையால்,சீதாவின் விழிகளில் வழிந்த நீரை எவரும் கவனிக்கவில்லை.....ரகுபதியையும் தன் குழந்தையையும் எண்ணி உள்ளம் கதறியவள்.....,யாரும் அறியாவண்ணம்,மெல்ல அவ்விடம் விட்டு விலகினாள்.......ஏற்கனவே அவள் ஏதோ தீர்மானம் எடுத்துவிட்டாள் போலும்.....கண்ணீரோடே அங்கிருந்து விடைபெற்றாள்.......
கொட்டி தீர்த்த மழையில் அடி மீது அடி வைத்து நடந்தாள்..........முன்ஜென்ம வசந்த நினைவுகள் அவள் மனத்திரையில் நிழலாடிக்கொண்டிருந்தது.....
அவளது மனம் ஆயிரம் காரியம் உரைத்து....
'என் மன்னிச்சுடுங்க அப்பா.....உங்களுக்காகவாச்சும் இந்த உலகத்துல வாழனும்னு தான் நினைக்குறேன்......ஆனால்,என் மனசு படுற வேதனைய என்னால தாங்க முடியல......💔ஆராயிரம் பௌர்ணமில,எல்லா ஆயிரங்களும் முடிஞ்சு போச்சு......இதுவர,எதுவும் பண்ண முடியல.....இனிமேலும் எதுவும் நடக்க போறதுல்ல.......என் குழந்தைய காப்பாத்துறதுக்காக,என் புருஷன தேடி தேடி,என் காலும் ஓஞ்சுபோச்சு.....இப்போ,என் புருஷன கண்டுபிடிக்க முடியுங்குற நம்பிக்கையும் இல்ல.....என் குழந்தைய காப்பாத்த முடியுங்குற நம்பிக்கையும் எனக்கில்ல.....இதுக்கு மேல நான் உயிரோட இருக்குறதுலயும் எந்த அர்த்தமும் இல்ல......சந்துரு.....எனக்காக நீ எவ்வளவோ பண்ணியிருக்க,...நான் இப்டி ஒரு முடிவு,எடுக்குறதுக்காக என்ன மன்னிச்சுடு......'என்று கதறிய சமயத்தில்,.....அவள் கால்கள்,மலையின் அந்த விளிம்பை அடைந்திருந்தது......ஒரு பெரிய ஆலமரமும்,அந்த விளிம்பில் கம்பீரமாக உயர்நதிருந்து.....மழையும் கொட்டிதீர்த்துக் கொண்டிருந்தது......
பூஜையில் திளைத்திருந்த சந்துரு இப்போது தான் கவனித்தான்......சீதா அங்கு இல்லை என்பதை.....அவன் மனமும் படபடத்தது.....அங்கு ஒரு சலசலப்பும் ஏற்படவே....சந்துருவும்,மோகித்தும் உடன் உதயாவும்,சீதாவை தேடி அந்த கூட்டத்தில் புறப்பட்டனர்....."சீதா....சீதா..."என அழைத்தவாறே,மூவரும் மூன்று திசையில் அவளை தேடி சென்றனர்......