Episode 114

122 5 2
                                    

பரத்தின் மருத்துவமனையில் சீதா அனுமதிக்கப்பட்டிருந்தாள்.......

அருகில் ராம் இருந்தான்.......ராஜனும் சுகுணாவும் ஸ்ருதியும் கூட,வந்திருந்தனர்.....

ஸ்ருதியின் கையிலிருந்த குழந்தையை கொஞ்சியவாறு அமர்ந்திருந்தான் சந்துரு.......இன்னொரு குழந்தை ராஜனின் கையில் இருந்தது

அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்....

சட்டென கதவை திறந்தவாறு உள்ளே வந்தாள் உதயா........அத்தனை ஆனந்தம் அவள் முகத்தில்,உடன் மோகித்தும் உள்ளே வந்தான்......

"சீதா......"

சீதாவிடம் வந்தவள் அவளை இறுக அணைத்து,ஆனந்தத்தை பகிர்ந்தாள்

"எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?...."உதயாவின் குரல்

ராஜனின் கைலிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள்.....

"வீட்ல என்ன சொல்லிட்டு வந்த?..."சீதா கேட்டாள்

"என்ன சொல்ல முடியும்....காலேஜ்ல இருந்து நான் தான் கூட்டிட்டு வந்தேன்....."மோகித் கூறினான்

எல்லாரும் களித்திருக்க,ராஜன் மெல்ல ராமை பார்த்து கண்ணசைத்தவாறு,அறைக்கு வெளியே சென்றார்.....அதை புரிந்துகொண்டு ராமும் பின்தொடர்ந்தான்.......

"என்னாச்சு மாமா...."ராம் கேட்டான்

"எல்லாம் நல்லபடியா நடந்துடுச்சு.....இனி அடுத்து ஆக வேண்டியத பாக்கணும்ல?....படிக்குறதுக்கு வெளியூர் போய்ருக்கா,அப்டி இப்டினு சொல்லி...அஞ்சு மாசம் ஓட்டியாச்சு.....ஊரறிய கல்யாணம் பண்ணா தானே நல்லாருக்கும்......"ஒரு தந்தையாக பேசினார் ராஜன்

"நானே பேசணும்னு நெனச்சேன்.....நீங்களே கேட்டுட்டீங்க....அப்பாகிட்ட பேசுனேன்,நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்,நீங்க தான் வந்து பொண்ணு கேக்கணும்னு சொல்லிருக்கேன்.....அப்பா ரெண்டு மாசத்துல வந்துடுவாரு....நான் பாத்துக்குறேன்.....நீங்க கவலபடாம இருங்க......"என்றவாறு ராஜனின் தோளை பற்ற,ராஜனும் ஆசுவாசம் கொண்டான்....மெல்ல தலையசைத்தார்

ராமநயனம் Where stories live. Discover now