பவானியின் வீட்டிற்கு அருகே சென்ற ருத்ரன்....ஜன்னல் வழியாக வீட்டின் நிலவரத்தை அறிய முற்பட்டான்....உடன் அஞ்சியும் நின்றிருந்தான்.....
அங்கு பவானியின் தாய் தெய்வத்திடம் வேண்டியவாறு,அழுதுகொண்டிருந்தார்......ஒரு நொடி ருத்ரனின் இதயமே நின்றுவிட்டது.......என்ன நடக்கிறது என்பதை,எவ்வாறு அறிவது என யோசித்த அவனுக்கு எந்த யோசனையும் எட்டவில்லை.......அதே நேரத்தில் பவானிக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற பதட்டம் அவன் இதயத்தை வேகமாக துடிக்க செய்தது.......
'வேறு வழியில்லை.....என்ன ஆனாலும் சரி,....உள்ளே சென்று பார்த்துவிடுவோம்....'என தீர்மானித்தவன்.......வீட்டிற்கு உள்ளே நுழைந்தான்
லேசாய் பதறினாள் பவானியின் தாய்.....ருத்ரன் தன் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கவே,....சற்று ஆறுதல் கொண்டாள்....இருப்பினும் மீண்டும் அழத்தொடங்கினாள்.....
"என்னவாயிற்று?...ஏன் அழுதுகொண்டிருக்கிறீர்கள்?....பவானி நலமோடு இருக்கிறாள் அல்லவா?....."பதட்டத்தோடே கேட்டான் ருத்ரன்
நா தழுதழுக்க....மெல்ல பேசினாள் பவானியின் தாய்...."இன்று மாலையிலிருந்தே பவானியை காணவில்லை......எங்கு சென்றாள் என்றும் தெரியவில்லை.....அவளது தந்தை அவளை தேடி சென்றுள்ளார்......நானோ,....ஈசனை நாடி நிற்கிறேன்......."என்றவாறு கதறினார்
அதிர்ச்சியில் உறைந்தான் ருத்ரன்......அவனுக்கு வார்த்தையே வரவில்லை....கண்களில் நீரும் பெருக்கெடுத்தது....விபரீத முடிவெடுத்திருப்பாளோ என்ற அச்சம்
"என்ன கூறுகிறீர்கள்?.....இதை ஏன் எங்களுக்கு தெரியபடுத்தவில்லை?......"ருத்ரனின் கண்களில் ஒரு கோபம்....உண்மையில் அது அன்பின் வெளிப்பாடு.....💓
வழிந்திருந்த கண்ணீரை துடைத்தவாறே.....'பவானிக்கு எந்த தீங்கும் நேர்ந்திருக்ககூடாது...'என்று தாய் பவானியை வேண்டியவாறு அங்கிருந்து,அவளை தேட புறப்பட்டான் ருத்ரன்....அங்கிருந்த தீ பந்தத்தையும் கையில் எடுத்துக்கொண்டான்