நிலவோடு விண்மீன்களும் அவர்களின் கைகள் கோர்த்துக்கொள்ளாதா?.....என்ற ஏக்கத்தில்,நடையை ரசித்துக்கொண்டிருந்தன.......🌙✨
தெருவிளக்கின் வெளச்சத்தில் யாருமில்லா சாலையில்.....ராமும் சீதாவும்.....
அவன் ஏன் மெல்ல நடைபோட்டான் என்று தெரியவில்லை......ஆனால்,அவள்.....அவனோடு நடக்கும் நொடிகளை நீட்டிக்கவே மெல்ல நடந்தாள்😉.......
நிலவும் தனிமையும் காரணமாக இருக்கலாம்.......இருவருக்குள்ளும் ஒரு இனம்புரியா படபடப்பு இருக்கத்தான் செய்தது.......அதை வெளிக்காட்டிகொள்ளாமல் இருவரும் நடக்க,இதயங்கள் இரண்டும் அவர்களே அறியா வண்ணம்.....இசைவடித்துக்கொண்டிருந்தது.......அதன் மயக்கத்தில் இருவரும் நடந்தனர்.....
அவனிடம் ஏதாவது பேசிவிட வேண்டும் என்று அவள் நினைத்தாள்.....ஆனால்,என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை.....இன்னும் சில நிமிடங்களில் பேருந்து நிறுத்தம் வந்துவிடும்......
"இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா,நயனா நல்லா பிக் அப் ஆயிடுவா....."மெல்ல பேச்சுகொடுத்தாள் சீதா...
"நல்ல முயற்ச்சி.....ஆனா,எந்த புரயோஜனமும் இல்ல..."ராம் இயல்பாக கூற...
"என்ன இப்படி சொல்லிட்டீங்க.....உங்க பொண்ணு மேல,நீங்களே நம்பிக்க வைக்கலன்னா எப்புடி?...."சீதா கேட்க,ஒரு நொடி நின்றவன் அவளை பார்த்தான்......
"நான் நயனாவ சொல்லல.....உன்ன தான் சொன்னேன்....."அதே விறைப்பான ராமின் குரல்
"என்னையா?..."குழப்பத்தோடே சீதா கேட்டாள்
"என்கூட பேசுறதுக்கு நீ எடுத்த முயற்ச்சிய சொன்னேன்....."என்றவாறு ராம் நடக்க.....நாக்கை கடித்தவாறு சற்றே தயங்கி நின்றாள் சீதா......மீண்டும் ராமோடு சென்று நடந்தவள்....
"ஏன் நீங்க எப்ப பாத்தாலும் சிடுசிடுன்னு பேசுறீங்க......கொஞ்சம் அன்பா பேசலாம் இல்ல?..."சீதா கேட்க....
"நீ எனக்கு யாரு.....உன்கிட்ட அன்பா பேச,என்கிட்ட என்ன இருக்கு?....வந்தோமா,டியூஷன் எடுத்தோமான்னு இருக்குறது தான் உனக்கு நல்லது.....தேவையில்லாத ஆசையெல்லாம் மனசுல வளத்துக்கவேண்டாம்......"நேரடியாக கூறாவிட்டாலும்,அவளுக்கு புரியும்படி தன் மனதில் உள்ளதை அவன் உரைத்தான்