பவானி தன் தாயை அழைத்து இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்,ருத்ரனும் நயனாவும் தாயின் கையால் உணவுண்டனர்.....
"அது சரி,உங்கள் கண்களை எதற்காக வலையாடையால் மறைத்துள்ளீர்கள்?....."பவானி கேட்டாள்
நயனாவை பார்த்து நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதுபோல் கண்ணசைத்துவிட்டு சமாளிக்க முற்பட்டான் ருத்ரன்"அது வேறொன்றுமில்லை,வாயை திறந்தால் மட்டுமல்ல ,இவன் கண்களை திறந்தாலும் பிரச்சனைதான்..."என்று ருத்ரன் கூறியபோது,லேசாக முறைத்தாள் நயனா
"அப்படியென்றால் கண்களிலும் கோளாறா?.....கவலைப்படாதீர்கள் சீக்கிரமே குணமாகிவிடும்"ஆறுதலாய் பேச முயன்றவளை பார்த்து கடமைக்கு புன்னகைத்தாள் நயனா
ஒரு வழியாக உணவுண்டுவிட்டு,பவானியின் தாயிடம் விடைபெற்றனர்
அரண்மனை நோக்கி நடக்கத்துவங்கினர்,அரண்மனைக்கு அருகில் வந்தபோது அதன் பிரம்மாண்டத்தை அண்ணாந்து பார்த்தான் ருத்ரன்
"எவ்வளவு பிரம்மாண்டமான அரண்மனை"ருத்ரன் கூறினான்
நயனாவிற்கு எரிச்சல்தான் வந்தது,"பவானிபுரியின் அரண்மனையும் பிரம்மாண்டமானது தான்,புதிதாய் ஒன்றைக் கண்டவுடன் பழமையை மறந்துவிடாதே"ருத்ரனிடம் மெதுவாய் கூறினாள்
"இருவரும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?...."
பவானி கேட்டாள்"ஒன்றுமில்லை,கலை ஆர்வத்தோடு கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனைக்குள் செல்ல ஆவலாய் உள்ளது என்கிறான்" ருத்ரன் சமாளித்தான்