"வா ராம்......எப்போ வந்த?..."மோகித் கேட்டான்
"இப்போ தான் வந்தேன்......என்ன விஷயமா,என்ன இங்க வரசொன்ன?...."ராம் கேட்டான்
ஏற்க்கனவே சீதாவை பற்றி பேசியிருந்ததால்,இப்போது எப்படி துவங்குவது என்று அவனுக்கு தெரியவில்லை......மௌனமாய் தவித்தான்......
ராம் மோகித்தின் அருகே வந்தான்.....கடலை பார்த்து கால்சட்டை பாக்கெட்டுக்குள் இருக்கைகளையும் நுழைத்தவாறு....காத்திருந்தான்....
அலைகள் மட்டுமே அங்கு கதைத்துக் கொண்டிருந்தது........
ராம் மௌனத்தை உடைத்து பேசினான்......"சீதா பத்தி பேசுறதுக்காகத்தான்,என்ன இங்க வர சொல்லிருப்பன்னு நினைக்குறேன்?......"
ஆனால் மோகித் எதுவும் பேசவில்லை.....
ராம் தொடர்ந்தான்......."நீயும் சந்துருவும் சீதாவும்......நேத்தைக்கு ஒரு பொண்ணு என்ன தேடி வந்துருந்தா.....நீங்க எல்லாருமே,ஒண்ணாதான் படிக்குறீங்கன்னு எனக்கு தெரியும்.....".....மோகித் மெல்ல அவனை பார்த்தான்
"அதோட,சீதாவுக்காகதான் நீங்க எல்லாருமே என்ன சுத்தி சுத்தி வர்றீங்கன்னும் எனக்கு புரியுது......உண்மையிலேயே சீதா ரொம்ப குடுத்துவச்சவ......மனசுல இருக்குறத சொல்றதுக்கும்,புரிஞ்சுக்குறதுக்கும் ......உங்கள் மாதிரி ஃப்ரண்ட்ஸ் அவளுக்கு இருக்காங்க.......அவளுக்கு புரிய வைங்க.....எனக்கு அவள கல்யாணம் பண்ணிக்குற எண்ணம் இல்ல......என்ன அவ வழிக்கு கொண்டுவர்றதுக்காக,நயனா மனச கலைக்க வேண்டான்னு சொல்லுங்க......ப்ளீஸ்...."ராம் மென்மையாக எடுத்துரைத்தான்
ராமின் பேச்சு மோகித்தின் நம்பிக்கையை மேலும் சோர்வாக்கியது.........
அதே சோர்வோடு தரையை பார்த்தவாறே ராமிற்க்கு முன்பாக சென்றான் மோகித்......
சட்டென மூட்டுகளை தரையில் ஊன்றி நின்றான்.....ராம் சற்றே பதட்டமானான்....
அவன் ராமின் கால்களை பற்ற துணிந்து விட்டான்.......ராம் அதற்க்கு அனுமதிக்கவில்லை,முந்திக்கொண்டான்......தடுத்துவிட்டான்