பிற தேசங்களில் இருந்து வந்த ஓலைகளை வாசித்தபடி அமர்ந்திருந்த ரகுபதியிடம்,....தன் கவிதையை ஓலையாய் எடுத்து நீட்டினாள் நயனா......
அதை பார்த்தவன்.....நயனாவின் முகத்தை பார்த்தான்.....மிகுந்த மலர்ச்சி.......
அந்த மலர்ச்சியை ரசித்தவாறே.....புன்னகையோடு ஓலையை வாங்கியவன்,அதை அவிழ்த்து படிக்கலானான்....
"❤️ராமநயனம்❤️.....என்ன இது?...உன் விழிகளுக்காக நீயே கவி வடித்துள்ளாயா என்ன?...."ரகுபதி கேட்க...
"இல்லை.....நான் உங்களின் நயனங்களை வைத்தே கவி வடித்துள்ளேன்.......ராம நயனங்கள் என்பவை,ரகுபதியின் நயனங்களை குறிப்பதாகும்...."உற்சாகமாக கூறினாள் நயனா
"ஆனால்....அனைவரிடம் இருந்தும் வேறுபட்டு சிறப்பு பெற்ற விழிகள் உனதல்லவா?....அப்படி இருக்க,என் விழிகளுக்கு கவிபாட என்ன சிறப்புள்ளது?...."ரகுபதி கேட்டான்
மெலிதாய் புன்னகைத்தாள் நயனா...."என் விழிகளை பார்த்து ஆடவர் மயங்குவதுண்டு.....அப்படியிருக்க,என்னை மயங்க வைத்த விழிகள் உங்களுடையதல்லவா?....."நயனா கேட்டாள்
ரகுபதி எதுவும் பேசவில்லை,அவளையே நோக்கி நின்றிருந்தான்😉....
திடீரென..."நீ என்னோடு வா....உன்னிடம் ஒன்றை காண்பிக்க வேண்டும்....."என்றவாறு நயனாவின் கையை பிடித்து அழைத்து வந்தான் ரகுபதி......
நயனாவின் கண்களை தன் கைகளால் மறைத்தவாறு அவளை அழைத்து வந்துகொண்டிருந்தான்....
"என்னவென்று கூறுங்கள்?....."நயனாவின் குரலிது
"உன் மனதை பூரிக்க செய்யும் ஒன்றை உனக்கு காட்டப்போகிறேன்......"ரகுபதி யின் குரலிது
"என் மனதை பூரிக்க செய்யும் ஒன்றா?....."நயனாவின் ஆர்வம் அதிகரித்தது....புன்னகையும் தான்
ஒருவழியாக அந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.....ரகுபதி தன் கைகளை விலக்க....மெல்ல தன் விழிகளை திறந்தவள்.....உண்மையில் பூரித்து விட்டாள்........
கொன்றை மரத்தின் விதைகள் முளைத்திருந்தன........🌱
"புதிதாக உதிக்கும் உயிர்,...ஈடில்லா ஆனந்தத்தை தன்னகத்தே கொண்டு இப்பூவுலகுக்கு வருகிறதல்லவா?????....."அதே பூரிப்போடே,தன் வயிற்றில் கை வைத்தவாறு ரகுபதியை பார்த்தாள் நயனா