அனைவரும் நயனாவின் அறைக்கு சென்றனர்.......சீதாவின் முகம் வாடியே இருந்தது......புத்தகங்களை எடுத்தவண்ணம் ரகுவும் நயனாவும் வந்து அமர்ந்தார்கள்......
"எந்த யூனிட் முதல்ல பாக்கலாம் ஆன்டி......"நயனாவின் குரலிது
"அடுத்த எக்ஸாம்க்கு உள்ள யூனிட்ட முதல்ல பாக்கலாம்...."சீதா கூற டியூசன் வகுப்பு தொடங்கி,நடந்துகொண்டிருந்தது....
அகாடமிக்கு செல்வதற்க்கு தயாராகியிருந்த ராம்,சட்டைக்கையை மடித்துவிட்டவாறே,அங்கு வந்தான்......அவசரகதியில்,"பாய் நயனா....."என்று கூற.....
"பாய் அப்பா....."நயனா கூறினாள்,ராம் ஒவ்வொரு முறையும் நயனா என்றழைக்கும்போதும் தன்னை அழைப்பதாகவே சீதா உணர்ந்தாள்......ஆனால்,அது தன்னை அல்ல,என்று அவள் உணரும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு வேதனையை வாரி வழங்கியது......
மதிய வேளை ஆனது.....அன்றைய டியூசனை நிறைவு செய்து,புறப்பட தயாராயிருந்தாள் சீதா......சோர்ந்த மனதோடு படியிறங்கி வந்தாள்,அங்கு வேலவனும் வள்ளியம்மையும் இருந்தனர்........
"நான் போய்ட்டு வர்றேன் பாட்டி.....போய்ட்டு வர்றேன் தாத்தா"சீதா கூற.....
"என்னம்மா மதியான நேரம் ஆச்சு....சாப்டுட்டு போலாம்....இந்த பாட்டியோட கைவண்ணத்த தெரிஞ்சுக்க வேண்டாமா?...."கரிசனமாக பேசினாள் வள்ளியம்மை
"இல்ல பாட்டி.....நான் வீட்டுக்கு போய் சாப்டுறேன்......இன்னொரு நாள் உங்க கையால சாப்டுறேன்....."வாடிய முகத்தில்,வலுக்கட்டாயமாக புன்னகையை கொண்டுவந்து பேசினாள் சீதா.....வள்ளியம்மைக்கும் மனம் வாடிப்போனது,என்னதான் இருந்தாலும்,....அவளையும் ஒரு காலத்தில் வளர்த்தவளல்லவா?......
ராமை எண்ணி மனம் நொந்தவாறே,அங்கிருந்து நகர்ந்தாள் சீதா.....
வாடிய முகத்தோடு அவளை அனுப்பவும் மனமில்லாமல்,தடுக்கவும் வழியில்லாமல்....தவிப்போடே,ஓர் இனம்புரியா உணர்வில் அவளை பார்த்து நின்றாள் வள்ளியம்மை....
"என்னாச்சு வள்ளி.....ஏன் உன்னோட முகம் வாடியிருக்கு......"வேலவன் கேட்டான்