வழக்கம்போல் அந்த கல்லூரி பொழுதில் அனைவரும் கூடியிருந்தனர்......சீதா நடந்தவற்றை கூறியிருந்தாள்........
"அவன் வேற எதுவும் சொல்லலயா?......"மோகித் கேட்டான்
"வேற என்ன சொல்லுவாரு,என் மேல எந்த ஃபீலிங்சும் இல்லங்குற மாதிரி பேசிட்டு போய்ட்டாரு....."சீதாவின் முகம் வாடிபோயிருந்தது
"இப்டியே போனா எப்டி.....நாள் வேற நெருங்கி கிட்டே இருக்கு.....எதாவது பண்ணியே ஆகணும்....."உதயா கூறினாள்
சந்துரு எதுவும் கூறவில்லை,தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.......
"அவரு என்ன மறந்து போனத கூட,நான் தாங்கிக்கிட்டேன்......அவர பாத்துட்டே வாழ்ந்துடுவேன்.....ஆனா,என் குழந்த....என் குழந்தய காப்பாத்த முடியாம போய்டுச்சுன்னா,அத என்னால தாங்கவே முடியாது......"கதறியவளை தோளோடு சாய்த்துக்கொண்டாள் உதயா.....
"அழாத நீ.....நாங்க எல்லாம் இருக்கோம்ல.......கண்டிப்பா,அவருக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வரும்......."பேச்சுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினாளே தவிர,உதயாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை........தீர்வை எதிர்பார்த்தவாறு,மோகித்தை பார்த்தாள்......அவனும் தவிப்போடே தலைகுனிய.......
"வேற வழியே இல்ல.....நயனாவ கிட்னாப் பண்ணிட வேண்டியது தான்......"சந்துருவின் குரல்
அனைவரும் சற்றே அதிர்ச்சியுற்றனர்......
"என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறியா......"சற்றே கடிந்தாள் உதயா
"இதெல்லாம் சின்னபுள்ள விளையாட்டு இல்ல சந்துரு.....எத பேசுறதா இருந்தாலும் யோசிச்சு பேசு....."மோகித் கூறினான்
"அவ சின்ன பொண்ணு.....நீ சொல்ற மாதிரி எல்லாம் பண்ணா.....அவ ரொம்ப பயந்துடுவா....அதுக்கப்புறம் அவ முகத்துலயே முழிக்க முடியாது......."சீதா கூறினாள்
"ஆளாளுக்கு நல்லா அட்வைஸ் பண்றீங்க.....ஆனா பிரச்சனைக்கு சொலூஷன் மட்டும் யாரும் சொல்ல மாட்டேங்குறீங்க......நாம என்ன பணம் காசுக்காகவா கிட்னாப் பண்ண போறோம்......நம்ம கிட்ட நியாயமான காரணம் இருக்கு,அத மத்தவங்களுக்கு புரியவைக்க முடியாது......அது மட்டும் இல்லாம நாம யாரையும் கஷ்டபடுத்தபோறதுல்ல.......முக்கியமா,இத தவிர நம்மகிட்ட வேற வழி இல்ல...."அழுத்தமாக தன் கருத்தை எடுத்து வைத்தான் சந்துரு